 கொள்ளுப்பிட்டியிலுள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலொன்றில் வைத்து தமிழ் வர்த்தர் ஒருவரின் மூக்கை கடித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்த ஐக்கிய தேசியக்கட்சியின் இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துனேஷ் கங்கந்தவிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கொள்ளுப்பிட்டியிலுள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலொன்றில் வைத்து தமிழ் வர்த்தர் ஒருவரின் மூக்கை கடித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்த ஐக்கிய தேசியக்கட்சியின் இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துனேஷ் கங்கந்தவிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.2012 ஆம் ஆண்டு மே மாதம் 27 ஆம் திகதி கடித்து காயப்படுத்தியதாக நாடாளுமன்ற உறுப்பினருக்கு எதிராக கொள்ளுப்பிட்டி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்கிணங்க கொள்ளுப்பிட்டி பொலிஸார் துனேஷ் கங்கந்தவிற்கு எதிராக கொழும்பு கோட்டை நீதிமன்றத்தில் நேற்று வழக்குத்தாக்கல் செய்தனர். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது வழக்கை யூன் 20 ஆம் திகதிக்கு நீதவான் ஒத்திவைத்தார்.
 
No comments:
Post a Comment