Wednesday, March 20, 2013

பேராதனைப் பல்கலைப் பகிடிவதையில் காட்டுத்தாவரங்களுடன் துர்நாற்றம் வீசும் சோறு உணவாக....

சென்ற 17 ஆம் திகதி இரவு பேராதனைப் பல்கலைக் கழக அக்பர் மண்டபத்தில் மாணவர்கள் சிலருக்கு பகிடிவதை புரிந்துகொண்டிருந்த பொறியியல் பீட 4 ஆம் வருட மாணவர்கள் 12 பேர் துணை வேந்தர் உள்ளிட்ட மேலதிகாரிகளிடம் கையும் களவுமாகப் பிடிபட்டுள்ளனர் என உயர் கல்வியமைச்சர் எஸ்.பீ. திசாநாயக்கா குறிப்பிட்டார்.

குறிப்பிட்ட தினம் இரவு 9 மணியளவில் துணைவேந்தர் பாதுகாப்பு அலுவலர்களுடன் அக்பர் மண்டபத்திற்கு வருகை தந்தபோது, பொறியியல் பீட சிரேட்ட மாணவர்களில் சிலர் பல்கலைக்கழக புதுமுக மாணவர்களுக்கு மனிதாபிமானமற்ற முறையில் பகிடிவதை கொடுப்பதையும், அவர்களுக்கு துர்நாற்றம் வீசும் சோற்றுடன் காட்டுத்தாவரங்களை உண்ணக்கொடுத்துள்ளதையும் கண்டிருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

பகிடிவதையுடன் தொடர்புடைய மாணவர்கள் உபவேந்தரையும் பாதுகாப்பு அலுவலர்களையும் கண்டு ஓடிவிட்டபோதும், அவர்களில் பன்னிரண்டுபேர் இனங்காணப்பட்டுள்ளனர் எனக் குறிப்பிட்ட அமைச்சர், அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு உபவேந்தருக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

(கேஎப்)

No comments:

Post a Comment