Tuesday, April 30, 2013

காதலுக்கு பெற்றோர் தடையாக இருந்ததால் மாணவி தற்கொலை!

உடதும்புர பிரதேச பாடசாலை ஒன்றில் க.பொ.த. சாதாரண தர வகுப்பில் கல்வி பயிலும் 15 வயதான மாணவி ஒருவர் தனது காதலுக்கு பெற்றோர் தடையாக இருந்ததன் காரணமாக பாழடைந்த வீடொன்றுக்குள் தனக்குத்தானே தீ வைத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று உடதும்பர பொலிஸ் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் குறித்து உடதும்பர பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட போது இம்மாணவி இளைஞர் ஒருவருடன் காதல் கொண்டிருந்ததாகவும் இதற்கு பெற்றோர் எதிர்ப்புத் தெரிவித்து வந்ததால் மன வேதனையில் பாடசாலை சென்ற இவர் திரும்பி வந்து பாழடைந்த வீட்டுக்குள் சென்று தனக்குத் தானே தீ வைத்துக் கொண்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்மாணவியின் மரணம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

மாபெரும் கல்வி தொழில் விசா சேவைகளும் கண்காட்சியும் கருத்தரங்குகளும்-சிகரம்

சிகரம் 3 ஆண்டு நிறைமுன்னிட்டு மாபெரும் கல்வி தொழில் விசா சேவைகளும் கண்காட்சியும் கருத்தரங்குகளும்- இம் மாதம் 3-4 திகதிகளில் வெள்ளி மற்றும் சனி காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை நடைபெறும்.


குறிப்பாக தினமும் காலை 9.30 முதல் 11.00 மணிவரை கருத்தரங்குகள் 15 மேற்பட்ட அரச தனியார் கல்வி தொழிழ் நிறுவனங்கள்.
O/L A/L படித்த மாணவர்கள் இளைஞர்யுவதிகள் மற்றும் அனைவரையும்  கலந்து கொள்ளுமாறு பாணிக்கின்றது.

               சிகரம் கல்வி தொழில் வழிகாட்டி சேவை
          ஊடக அனுசரணை  டான் யாழ் ஒளி மற்றும் அலைகஅ91.4
                                சிகரம் இல. 153 பலாலி வீதி கந்தர்மடம் யாழ்ப்பாணம்.
 

உழைக்கும் மக்களுக்கு தேசத்தின் நன்றிகள்!

மே தினச் செய்தியில் ஜனாதிபதி-
HE   copyதொழிலாளர்களின் உரிமைகளுக்காக அணி திரண்டுள்ள உழைக்கும் மக்களுடன்
தானும் சினேக பூர்வமாக இணைந்து கொண்டு அவர்களின் உயர்வுக்காக உழைப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள மே தினச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

சர்வதேச தொழிலாளர் தினத்தை மதிப்புடனும் கெளரவத்துடனும் கொண்டாடுவதற்கான சந்தர்ப்பத்தை எமக்களித்த எமது நாட்டின் உழைக்கும் மக்களுக்கு தேசத்தின் நன்றிகளை மிகுந்த கெளரவத்துடன் சமர்ப்பிக்கிறேன்.

எமது நாடு இன்று ஒரு மத்திய தர வருமானம் பெறும் நாடாகவுள்ளது. தேசிய பொருளாதாரத்தை சரியான திசையில் செலுத்தியதன் காரணமாக இந்த அடைவை நாடு அடைந்துள்ளது.

இதன் பின்னாலுள்ள மிக முக்கிய சக்தியாக எமது நாட்டின் உழைக்கும் மக்கள் இருக்கின்றனர். அவர்கள் எமது நாட்டின் எதிர்காலம் குறித்த மிகச் சரியான பார்வையைக் கொண்டுள்ளனர். அவர்கள் நாட்டினதும் அரசாங்கத்தினதும் ஸ்திரத்தன்மையைப் பாதுகாப்பதற்கு மிகுந்த பொறுப்புணர்வுடன் எப்போதும் செயற்படுகின்றனர்.

இந்த ஒத்துழைப்பு சர்வதேச தொழிலாளர் தாபனத்தின் பாரம்பரியங்களைப் பாதுகாத்துள்ளதுடன் உலகின் உழைக்கும் மக்களின் கெளரவத்திற்கு பங்களிப்புச் செய்யும் நாட்டை கட்டியெழுப்புவதிலும் உதவியுள்ளது.

இன்று கிராமும் நகரமும் சம அளவில் அபிவிருத்தி அடைந்துள்ளன. விவசாயத்துறையிலும் தொழிற்துறையிலும் அரசாங்கம் முறையான கவனத்தைச் செலுத்துகின்றது. அரசாங்க மற்றும் தனியார்த்துறை சேவைகளின் பாதுகாப்புக்காக சட்ட திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

எனவே- உழைக்கும் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கின்ற ஒரு சமூகத்தை நாம் இன்று கட்டியெழுப்பி யுள்ளோம். உலகில் அபிவிருத்தியடைந்த நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் அனுபவிக்கும் பெரும்பாலான உரிமைகளை எமது மக்கள் இன்று அனுபவிக்கின்றனர்.

சிறந்த தொழில்நுட்பம்- போக்குவரத்து- கல்வி மற்றும் சுகாதார வசதிகளினூடாக எமது உழைக்கும் மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்பட்டுள்ளது.

இந்த உரிமைகளைப் பாதுகாப்பதற்காக எடுக்கப்பட்டிருக்கும் முன்னேற்ற நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன் கொண்டு செல்வதற்கு இந்த சர்வதேச தொழிலாளர் தினத்தில் நாம் திட உறுதியுடனும் அர்ப்பணத்துடனும் கைகோர்ப்போம்.

எமது தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கு பங்களிப்புச் செய்யும் உழைக்கும் மக்களுக்கும் தொழிற்சங்க செயற்பாடுகளுக்கும் வெற்றி கிட்ட வேண்டுமென நான் பிரார்த்திக்கின்றேன்

இன்று உலக தொழிலாளர் தினம்!

labour

உலக தொழிலாளர் தினமான இன்று கொழும்பு உட்பட நாடு முழுவதிலும் பல்வேறு பகுதிகளில் மே தின ஊர்வலங் கள் மற்றும் கூட்டங்கள் நடை பெற
வுள்ளன.

நாடளாவிய ரீதியில் நடைபெறவுள்ள மே தின ஊர்வலங்கள் மற்றும் கூட்டங் களில் பெருந்திரளான மக்கள் தொழிலா ளர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

இதற்கான சகல ஏற்பாடுகளையும்- அரசியல் கட்சிகளும் தொழிற் சங்கங்களும் பூர்த்தி செய்துள்ளன. பிரதான அரசியல் கட்சிகள்- தொழிற் சங்கங்கள் கொழும் பிலும் ஏனைய கட்சிகளும் தொழிற் சங்கங்களும் கொழும்புக்கு வெளியிலும் நடத்துகின்றன

400 கோடி ரூபா மோசடியில் ஈடுபட்ட இறைவரி திணைக்களத்தின் ஆணையாளருக்கு 14 மாத கால கடூழிய சிறை தண்டனை!

400 கோடி ரூபா வட் வரி மோசடியில் குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்ட உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் முன்னாள் ஆணையாளர் ஏ.டபிள்யு. அம்பேபிட்டியவுக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு உயர்நீதிமன்றம் ஏ.டபிள்யு. அம்பேபிட்டியவுக்கு 14 மாத கால கடூழிய சிறை தண்டனை விதித்துள்ளது. அத்துடன் 5 லட்சம் ரூபா அபராதம் செலுத்த வேண்டுமென்றும், உத்தரவிட்டுள்ளது. அபராத தொகையை செலுத்த தவறினால், மேலும் ஈராண்டுகால சிறை தண்டனை விதிக்கப்படலாமென, மேல் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்ததுள்ளது.

மேல் நீதிமன்ற நீதிபதி குமுதினி விக்ரமசிங்க முன்னிலையில், வட் வரி மோசடி தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுததுக்கொள்ளப்பட்டது. வட் வரி மோசடியின் பிரதி வாதியான எஸ்.எம். அஷ்ரப் எனும் வர்த்தகருக்கு, ஈராண்டுகால கடூழிய சிறை தண்டனையும், 6 கோடி ரூபா அபராதமும் விதிக்கப்பட்டது. இதனை செலுத்த தவறினால், அவரது சொத்துகளை பறிமுதல் செய்வதற்கும், கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டடுள்ளது.

2002 மற்றும் 2004ம் ஆண்டு காலப்பகுதியில் உள்நாட்டு இறைவரி திணைக்களத்தில் வட் வரி மோசடி தொடர்பான 13 பிரதிவாதிகள் இனங்காணப்பட்டுள்ளனர். குற்றத்தை ஒப்புக்கொண்ட மூவருக்கு, இதற்கு முன்னர் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மற்றொரு சந்தேக நபர் தொடாபான விசாரணைகள், தொடாந்தும் இடம்பெறுகின்றன.

‘சப்றா ஃபினான்ஸ்’ நிதி நிறுவன மோசடி குறித்து விசாரிக்க அரசாங்கம் முடிவு?! முக்கிய மோசடி பேர்வளியான சரவணபவன் சிக்குவாரா?

(சுன்னாகம் நிருபர்)1980களில் யாழ்ப்பாணத்தில் செயல்பட்ட ‘சப்றா ஃபினான்ஸ்’ நிதி நிறுவனத்தில் நடைபெற்ற பெரும் மோசடிகள் குறித்து அரசாங்கம் விசாரணைகளை நடாத்தத் தீர்மானித்துள்ளதாகத் தெரிய வருகிறது. இந்த நிறுவனம் அந்த நேரத்தில் அறிவித்த வட்டி வீதங்களால் கவரப்பட்ட வட பகுதி மக்கள் தமது கோடிக்கான பணத்தை இந்த நிதி நிறுவனத்தில் வைப்புச் செய்தனர். அவர்களில் பலதரப்பட்ட மக்கள், அதாவது தமது பிற்கால சீவியத்துக்கென பணத்தைச் சேமித்து வைத்திருந்தோர், பிள்ளைகளின் திருமணத்துக்காக பணம் வைத்திருந்தோர், காணி பூமிகளை விற்றுப் பணம் வைத்திருந்தோர் என பல வகையினர் அடங்கியிருந்தனர்.

ஆனால் ஒரு குறிப்பிட்ட காலத்தின் பின்னர் இந்த நிதி நிறுவனம் தனது காரியாலயத்தை இழுத்து மூடிவிட்டு பொதுமக்கள் வைப்பிலிட்ட பணத்துக்கு கையை விரித்துவிட்டது.

அதனால் பலர் ஒன்றும் செய்ய முடியாது பரிதவித்ததுடன், சிலர் அதனால் ஏற்பட்ட மனமுடைவதால் மரணித்த சம்பவங்களும் நிகழ்ந்தன. பலர் தமது பணத்தை மீளப்பெற எடுத்த முயற்சிகள் பயனளிக்கவில்லை.

இந்த நிதி நிறுவனத்தில் பணம் வைப்பிலிட்டோர் சேர்ந்து ஒரு சங்கத்தை அமைத்து செயல்பட முற்பட்டாராயினும், அதுவும் பலனளிக்கவில்லை. அந்தக் காலகட்டத்தில் இலங்கையில் நடந்த மிகப்பெரிய துணிகரமான நிதி மோசடி இதுதான்.

பிற்காலத்தில் சிலர் இது சம்பந்தமாகப் புலிகளின் உதவியை நாடிய போதிலும், புலிகள் அது சம்பந்தமாக அக்கறை செலுத்தாததுடன், அந்த நிதி நிறுவனத்தின் முக்கிய நிர்வாகிகளைப் பாதுகாக்கவும் செய்தனர்.

தமிழர் விடுதலைக் கூட்ணியின் முன்னாள் தலைவரும், உடுப்பிட்டித் தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவருமான காலஞ்சென்ற மு.சிவசிதம்பரம் அவர்கள் இந்தப் பண மோசடி சம்பந்தமாக அப்போதைய சட்டமா அதிபருடன் பேசி சில நடவடிக்கைகளை எடுக்க முன்வந்தாராயினும், அவர் பின்னர் இறந்துவிட்டதால் அம்முயற்சிகள் கைகூடவில்லை.

இந்த நிதி நிறுவனத்தில் தற்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பில் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் ஈ.சரவணபவன் ஒரு முக்கிய நிர்வாகியாக செயல்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் அவர் மீதும் பொதுமக்களால் குற்றம் சுமத்தப்பட்டது.

அவர் இந்த நிதி நிறுவனத்தில் மோசடி செய்த பணத்தை வைத்துத்தான் இன்று அவர் நடாத்தி வரும் ‘உதயன்’ பத்திரிகையை ஆரம்பித்தார் என்ற குற்றச்சாட்டுகளும் பொதுமக்களால் சுமத்தப்பட்டது. அவரை ‘இன்ரபோல்’ என்ற சர்வதேச பொலிஸ் நிறுவனம் தேடி வருவதாகவும் பரவலாகக் கதைகள் இருந்தன. அவரும் சில காலம் பொதுமக்களின் கண்களில் படாமலும், யாழ்ப்பாணம் வருவதைத் தவிர்த்தும் இருந்தார்.

காலம் தாழ்த்தியாயினும் அரசாங்கம் இப்பொழுது இந்த நிதி நிறுவன மோசடி குறித்து விசாரிக்க முன்வந்ததை, இந்த நிதி நிறுவனத்தில் பணம் வைப்பிலிட்டவர்கள் மட்டுமின்றி, வட பகுதிப் பொதுமக்கள் அனைவரும் வரவேற்றுள்ளனர்.

இது சம்பந்தமான விசாரணைகளின் போது பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவன் மீதும் விசாரணை நடாத்தப்படுமா என்பது இன்னமும் நிச்சயமாகத் தெரிய வரவில்லை. இருந்த போதிலும,; ‘சப்றா ஃபினான்ஸ்’ என்றவுடன் மக்கள் சரவணபவனை நினைப்பதாலும், அவர் இந்த நிறுவனத்தில’ முக்கியமான பதவியொன்றை வகித்ததாலும், அவரை நிச்சயமாக விசாரிக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் அபிப்பிராயமாக உள்ளது.

விரைவில் நடைபெறவுள்ள வட மாகாணசபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக தனது மைத்துனர் ந.வித்தியாதரனை களமிறக்க சரவணபவன் எம்.பி முற்பட்டு வருவதாகக் கூறப்படும் நிலையில் இந்த விசாரணை வர இருப்பது, அவருக்கு ஒரு சோதனை என்றே சொல்ல வேண்டும். அவருக்கு மட்டுமின்றி வட மாகாணசபைத் தேர்தலில் களமிறங்கக் காத்திருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இது ஒரு சோதனை என்றுதான் கூற வேண்டும்.

நன்றி தேனீ

முன்னாள் பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயகவிற்கு உச்சநீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவு!

முன்னாள் பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயகவிற்கு உச்சநீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. சலீம் மர்சூப், பிரியசாத் டெப், ஈவா வனசுந்தர ஆகிய மூவரடங்கிய உச்சநீதிமன்ற நீதியரசர்கள் குழு, இவ்வுத்தரவை பிறப்பித்துள்ளனர். எதிர்வரும் 29ம் திகதி ஷிரானி பண்டாரநாயக உச்சநீதிமன்றத்தில் ஆஜராக வேண்டுமென, இவர்கள் தெரிவித்துள்ளனர்.

பாராளுமன்ற விசேட தெரிக்குழுவின் தீர்மானத்தை வலுவற்றதாக்குமாறு கோரி, ஷிரானி பண்டாரநாயக சமர்ப்பித்த மேன்முறையீட்டு மனுவை விலக்கிக்கொள்ளூறு கூறி, சட்டமா அதிபர் பாலித பெர்னாண்டோ உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்த மனு, இன்று கவனத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதனடிப்படையில் இந்த வழக்கு விசாரணையில் ஆஜராகுமாறு ஷிரானி பண்டாரநாயகவிற்கு உச்சநீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்தது.

அத்துடன் இடைக்கால மனுக்களை தாக்கல் செய்த பாராளுமன்ற உறுப்பினர்களான, ஆர். சம்பந்தன் விஜித ஹேரத் ஆகியோருக்கும், எதிர்வரும் 29ம் திகதி உச்சநீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டு, அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. சட்டமா அதிபர் பாலித பெர்னாண்டோ விளக்கமளிக்கையில், மேல் நீதிமன்றத்தில் உள்ள நீதியரசர்கள் தொடாபாக, ஒழுக்காற்று நடவடிக்கைகளை மேற்கொள்ளும் தீர்மானத்தை எடுக்கும் அதிகாரம், பாராளுமன்றத்திற்கே உண்டு என தெரிவித்தார். இதற்கு எதிராக, உத்தரவு பிறப்பிப்பதற்கு, எந்தவொரு நீதிமன்றத்திற்கும் அதிகாரம் இல்லையென பாலித பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். பாராளுமன்ற தெரிவுக்குழுவின் தீர்ப்பு, உச்சநீதிமன்றத்தினால் வலுவிழக்கச்செய்வது, பிழையான முன்னுதாரணமாகுமென்றும், சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு செயலாளர், பொலிஸ் மா அதிபருக்கு விசேட பணிப்புரை

மே தினத்தையொட்டி, விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு, பாதுகாப்பு செயலாளர், பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை வழங்கியுள்ளார். நாளை இடம்பெறவுள்ள உலக தொழிலாளர் தினத்தையொட்டி மே தின ஊர்வலங்கள் மற்றும் மே தின கூட்டங்கள், கொழும்பில் நடைபெறவுள்ளன. கொழம்பு மற்றும் அதனை சூழவுள்ள பிரதேசங்களில் 13 மேதின ஊர்வலங்களும், 17 மே தின கூட்டங்களும் நடைபெறவுள்ளன.

இதில் கலந்து கொள்ளும் மக்களின் பாதுகாப்பு கருதி, விசேட வேலைத்திட்டங்களை மேற்கொள்ளுமாறு, பதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்ககோனுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார். இதற்கமைய, விசேட போக்குவரத்து ஒழுங்குகள் மற்றும் மக்களின் பாதுகாப்பு கருதி 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொலிஸாரை கடமையில் ஈடுபடுத்தவும், நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

வெளி மாகாணங்களிலிருந்து மே தின ஊர்வலம் மற்றும் கூட்டங்களில் கலந்து கொள்ள வருகை தரும் மக்களுக்கு கொழும்பில் பிரவேசிப்பதற்கான விரிவான வேலைத்திட்டங்களும் வகுக்கப்பட்டுள்ளன. பிரதான வீதிகளுடாக கொழும்பில் பிரவேசிக்கும் வாகனங்களை நிறுத்துவதற்கு, தனியான இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு தரப்பினர் வழங்கும் ஆலோசனைகளுக்கமைய, செயற்படுமாறு, மேதின ஊர்வலங்கள் மற்றும் கூட்டங்களில் கலந்து கொள்ளும் மக்களை பொலிஸார் கேட்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மே தின கூட்டம், பொரளை கெம்பல் மைதானத்தில் நடைபெறவிருப்பதுடன், ஊர்வலம், தாமரை தடாகத்திற்கு அருகாமையிலிருந்து ஆரம்பமாகும். மருதானை வைட் மைதானத்திலிருந்து மக்கள் கட்சியின் ஊர்வலமும், தேச விமுக்தி மக்கள் கட்சியின் மே தின ஊர்வலம், மருதானை வீதியூடாக வந்து, பொரளை சந்தியில் ஐககிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மே தின ஊர்வலத்தில் இணைவுள்ளது. மக்கள் ஐக்கிய முன்னணியின் மே தின ஊர்வலம் ஆயுர்வேத சநதி, சிறுவுர் விளையாட்டு மைதானத்திற்கு அருகாமையில் காசல் வீதியூடாக வந்து, பொரளை டி.எஸ். சந்தியில் பிரதான ஊர்வலத்தில் இணையவுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மே தின கூட்டத்தை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில், சகல பங்காளி கட்சிகளின் பங்கேற்புடன் அதிவிமர்சையாக நடாத்த, ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

முக்கொலையுடன் தொடர்புபட்ட மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் C.I.D யினரால் கைது!



2008 இல் கோமறங்கடவல பகுதியில் இடம்பெற்ற முக்கொலையுடன் தொடர்புடையவர்களென்ற சந்தேகத்தின் பேரில் நேற்று இரகசிய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நேற்று திருகோணமலை மஜிஸ்திரேட் நீதிமன்றில் இரகசிய புலனாய்வு பிரிவினரால் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.

திருகோணமலை கொமறங்கடவல பிரதேசத்தில் 05 வருடத்திற்கு முன்னர் இடம் பெற்ற முக்கொலைகளுடன் தொடர்புடைய சந்தேக நபர்களான கந்தளாய் பொலிஸ் பரிசோதகர் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை இரவு இரகசிய புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

2008 ம் ஆண்டு கோமறங்கடவல பம்புறுவௌ பிரதேசத்தில் விறகு வெட்டுவதற்கு காட்டுக்கு சென்ற கணவன் மனைவி உட்பட இன்னுமொரு நபர் சந்தேகமான முறை யில் வெட்டிக் கொல்லப்பட்டனர். இக் கொலைச் சம்பவம் நடைபெற்ற போது ரத்னாயகே முதியன்சலாகே றுவன் சமிந்த ரத்னாயக்க (பொலிஸ் பரிசோதகர் கந்தளாய்), கேவவிதானகே சமிச்தலால், விதானகே சுசில் பிரேமலால் கருணாசே (அனுராதபுரம்) ஆகியோர் கோமறங்கடவல பகுதியில் பணி புரிந்த வர்கள் என தெரிய வருகிறது. கிராமவாசிகள் இவர்களே இக்கொலைகளைச் செய்திருக்க வேண்டுமென விடுத்த முறைப்பாட்டைக் கொண்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

இரகசிய புலனாய்வுப் பிரிவினர் தேடுவதை அறிந்த கந்தளாய் பொலிஸ் பரிசோதகர் கடந்த ஞாயிற்றுக்கிழமை கந்தளாய் தள வைத்தியசாலையில் மாரடைப்பு என அனுமதியானார். புலனாய்வு பிரிவினர் வைத்திய அதிகாரி யிடம் இவரது நோய் உண்மையா எனக் கேட்ட போது இவருக்கு இவ்வா றான நோய் இல்லை எனவும் தெரிவித்தார்.

நீதிமன்ற விசாரணைகளைத் தொடர்ந்து நீதிபதி எஸ். சதீஸ்தரன் குற்றவாளிகளை மே 13 ஆம் திகதி வரை திருகோணமலை விளக்கமறியலிலும் கந்தளாய் விளக்க மறியலிலும் வைக்கும்படி உத்தரவிட்டார்.

சூரிய மின்சாரம் மூலம் மீன்களை உலர்த்தும் நவீன சாதனம் அறிமுகம்!

nathandiya-1
சூரிய மின்சாரத்தைப் பயன்படுத்தி மீன்களை உலர்த்தி உயர் ரக கருவாடு தயாரிக்கும் கூடு வடிவிலான புதிய சாதனம் ஒன்று புத்தளம் மாவட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


தொழில்நுட்பவியல் ஆராய்ச்சி மற்றும் அணுசக்தி அமைச்சினhல் நாத்தண்டியில் உள்ள மூதுகட்டுவ என்ற மீனவக் கிராமத்தில் இந்த சு+ரிய சக்தி மின்கூடு ஒரு லட்சத்து 72 ஆயிரம் ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ளது.

மண் மற்றும் தூசி கலக்காத தூய்மையான நிலையில் நாளென்றுக்கு 120 கிலோ மீன்வகைகளை உலர்த்தக்கூடியதாக இந்தக் கூடு உருவாக்கப்பட்டுள்ளது.


இதன் பராமரிப்புச் செலவுகள் மிகவும் குறைவனதோடு கடற்கரைப் பிரதேசங்களில் மிக இலகுவாக இந்தக் கூடுகளை நிறுவ முடியும்.


இதே போன்ற கூடுகள் மீன்வளம் அதிகளவில் உள்ள நீர்கொழும்பு – புத்தளம் - மற்றும் இலங்கையின் வடக்கு கிழக்கு கடற்பிரதேசசங்களிலும் அமைக்க அமைச்சு நடவடிக்கை எடுத்துள்தாக அறிவிக்கப்பட்டுள்ளது.


மூதுகட்டுவ பிரதேச மீனவர் சங்கத்தினரிடம் இதனை ஒப்படைக்கும் நிகழ்வு நேற்று (29) வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்வில் நாத்தண்டி பிரதேச செயலாளர் உட்பட மாகாணசபை அமைச்சர் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

போக்குவரத்து ஒழுங்கு விதிமுறைகளை மீறிய 29 லட்சம் சாரதிகளுக்கு எதிராக வழக்கு!

போக்குவரத்து ஒழுங்கு விதிமுறைகளை மீறிய 29 இலட்சம் வாகன சாரதிகளுக்கு எதிராக கடந்த ஆண்டு மாத்திரம் வழக்கு தொடரப்பட்டு சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து ஒழுங்குகள் மற்றும் வீதி பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அமரசிறி சேனாரத்ன தெரிவித்தார்.

நாடு முழுவதிலும் உள்ள 38 இலட்சம் பேருக்கு மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தினால் சாரதி அனுமதிப் பத்திரம் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர்- இவர்களிலேயே 29 இலட்சம் பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

இதேவேளை- 44 இலட்சம் வாகனங்கள் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

ஓல்கோட் மாவத்தையிலுள்ள கொழும்பு பிராந்தியத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் நேற்றுக் காலை நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் மேலும் விளக்கமளித்த பிரதிப் பொலிஸ் மா அதிபர்-

வாகன விபத்துக்களை தடுக்கவும் வீதி ஒழுங்கு விதிமுறைகளை மீறி முறையற்ற விதத்தில் வாகனங்களை செலுத்துவதை தடுக்கும் வகையிலுமே போக்குவரத்து பொலிஸார் 29 இலட்சம் சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் நிலை நேர்ந்தது.

வாகன சாரதிகள்- பயணிகள் மற்றும் பாதசாரிகள் ஆகிய மூன்று தரப்பினர்களின் பொறுப்பற்ற தன்மையும்இ கவனயீனமுமே தொடர் விபத்துகளுக்கு காரணம் என்றும் தெரிவித்தார்.

எனினும் அந்த வாகனங்களை செலுத்தும் சாரதிகளில் சுமார் 38 இலட்சம் பேருக்கே வாகன அனுமதிப் பத்திரங்கள் காணப் படுகின்றன. இதில் ஒரு வாகனம் அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட வாகனங்கள் காணப்படும் நபர்கள் அல்லது நிறுவனங்கள் சுமார் 25000 ஆகும்.

இதன் பிரகாரம் வாகனம் செலுத்தும் சாரதிகளில் சுமார் ஆறு இலட்சம் பேருக்கு சட்டரீதியான சாரதி அனுமதிப் பத்திரம் இல்லையென தெரிய வந்துள்ளது.

கடந்த சில மாதங்களில் வீதி விபத் துக்களுடன் தொடர்புடைய சுமார் 600 இற்கும் மேற்பட்டவர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது. சாரதி அனுமதிப் பத்திரமின்றி வாகனம் செலுத்தும் அதிகமானவர்கள் இளைஞர்கள் எனவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

18 வயது பூர்த்தியடையாத பாடசாலை மாணவர்கள் கூட சாரதி அனுமதிப் பத்திரமின்றி நவீன வாகனங்களை செலுத்திய நிலையில் பொலிஸாரிடம் சிக்கியுள்ளனர். இவர்களில் அதிகமானவர்கள் செல்வந் தர்களின் பிள்ளைகளாகவும் உயர் பதவி வகிப்போரின் பிள்ளைகளாகவும் இனங் காணப்பட்டுள்ளனர்.

பொலிஸ் மா அதிபர் என்.கே. இலங்க கோன் அவர்களின் பிரதான எதிர்பார்ப்பாக அமைவது இந்த ஆண்டிலே வீதி விபத்துகளை 20 வீதத்தால் குறைப்பதாகும். அதற்கு தேவையான சட்ட திட்டங்கள்இ செயலமர்வுகள்இ பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்கள்இ பொது மக்களுக்கான அறி வுறுத்தல்கள் வழங்குதல் என்பன தொடர் பாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கும் வாகன போக்குவரத்து பிரிவு பொலி ஸாருக்கும் ஆலோசனை வழங்கியுள்ளார் என்றும் தெரிவித்தார்

பாலியல் குற்றச்சாட்டு தொடர்பில் பொலிஸாரினால் தேடப்பட்டு வந்த காத்தான்குடி நகர சபை உறுப்பினர் சரண்!

மாணவி ஒருவர் மீது பாலியல் சேஷ்டை புரிந்தார் என்ற குற்றச்சாட்டு சம்பந்தமாக பொலிஸாரினால் தேடப்பட்டு வந்த காத்தான்குடி ஆளுங்கட்சி நகர சபை உறுப்பினறும், பொருளியல் பாட ஆசிரியருமான பாக்கீர் இன்று செவ்வாய்க்கிழமை காலை மட்டக்களப்பு மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.

சரணடைந்த இவரை எதிர்வரும் 08ம் திகதி புதன்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி என்.எம்.அப்துல்லாஹ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

முக்கொலையுடன் தொடர்புபட்ட மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் C.I.D யினரால் கைது!

2008 இல் கோமறங்கடவல பகுதியில் இடம்பெற்ற முக்கொலையுடன் தொடர்புடையவர்களென்ற சந்தேகத்தின் பேரில் நேற்று இரகசிய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நேற்று திருகோணமலை மஜிஸ்திரேட் நீதிமன்றில் இரகசிய புலனாய்வு பிரிவினரால் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.

திருகோணமலை கொமறங்கடவல பிரதேசத்தில் 05 வருடத்திற்கு முன்னர் இடம் பெற்ற முக்கொலைகளுடன் தொடர்புடைய சந்தேக நபர்களான கந்தளாய் பொலிஸ் பரிசோதகர் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை இரவு இரகசிய புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

2008 ம் ஆண்டு கோமறங்கடவல பம்புறுவௌ பிரதேசத்தில் விறகு வெட்டுவதற்கு காட்டுக்கு சென்ற கணவன் மனைவி உட்பட இன்னுமொரு நபர் சந்தேகமான முறை யில் வெட்டிக் கொல்லப்பட்டனர். இக் கொலைச் சம்பவம் நடைபெற்ற போது ரத்னாயகே முதியன்சலாகே றுவன் சமிந்த ரத்னாயக்க (பொலிஸ் பரிசோதகர் கந்தளாய்), கேவவிதானகே சமிச்தலால், விதானகே சுசில் பிரேமலால் கருணாசே (அனுராதபுரம்) ஆகியோர் கோமறங்கடவல பகுதியில் பணி புரிந்த வர்கள் என தெரிய வருகிறது. கிராமவாசிகள் இவர்களே இக்கொலைகளைச் செய்திருக்க வேண்டுமென விடுத்த முறைப்பாட்டைக் கொண்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

இரகசிய புலனாய்வுப் பிரிவினர் தேடுவதை அறிந்த கந்தளாய் பொலிஸ் பரிசோதகர் கடந்த ஞாயிற்றுக்கிழமை கந்தளாய் தள வைத்தியசாலையில் மாரடைப்பு என அனுமதியானார். புலனாய்வு பிரிவினர் வைத்திய அதிகாரி யிடம் இவரது நோய் உண்மையா எனக் கேட்ட போது இவருக்கு இவ்வா றான நோய் இல்லை எனவும் தெரிவித்தார்.

நீதிமன்ற விசாரணைகளைத் தொடர்ந்து நீதிபதி எஸ். சதீஸ்தரன் குற்றவாளிகளை மே 13 ஆம் திகதி வரை திருகோணமலை விளக்கமறியலிலும் கந்தளாய் விளக்க மறியலிலும் வைக்கும்படி உத்தரவிட்டார்.

தேர்தலில் போட்டியிட வந்த முஷாரப் தேர்தல் தினத்தில் வீட்டுக் காவலில் இருக்கும் நிலை!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ கடந்த 2007-ம் ஆண்டு டிசம்பரில் ராவல்பிண்டியில் நடந்த தேர்தல் பிரசார பேரணியின் போது வெடிகுண்டு வீசியும், துப்பாக்கியால் சுட்டும் படுகொலை செய்யப்பட்டார். அப்போது, ஜனாதிபதியாக இருந்த முஷாரப் போதிய அளவு பாதுகாப்பு கொடுக்காததால்தான் இச்சம்பவம் நடந்ததாக குற்றம் சுமத்தப்பட்டது.

இவர் மேல் தீவிரவாத தடுப்பு நீதிமன்றத்தில் 57 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. பாகிஸ்தானைவிட்டு வெளியேறி பல நாடுகளில் வாழ்ந்து வந்த முஷாரப், பாகிஸ்தானில் வரும் மே 11-ம் திகதி நடைபெற உள்ள தேர்தலில் போட்டியிடுவதற்காக நாடு திரும்பினர்.

அப்போது, 60 நீதிபதிகளை பதவி நீக்கம் செய்த வழக்கில் வழக்கில் முஷாரப் கைது செய்யப்பட்டு 2 வார வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். இந்த காவல் மே 4-ம் திகதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில் ராவல்பிண்டி நீதிமன்றம் பெனசீர் புட்டோ கொலை வழக்கில் அவரை மே 14-ம் திகதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது. இதனால் தேர்தல் தினத்தின் போதும் அவர் வீட்டுக் காவலில் இருப்பார் என தெரிகிறது.

அரசுக்கு எதிராக 5,000 வழக்குகளை தாக்கல் செய்யப்போறாங்களாம் கூட்டமைப்பினர்!

பலாலி விமான நிலையம், காங்கேசன் துறைமுகம் ஆகியவற்றைச் சுற்றியுள்ள தமிழர்களின் 6,000 ஏக்கர் காணிகளை இராணுவத்துக்காகச் சுவீகரிக்க அரசு எடுக்கும் நடவடிக்கைகளை எதிர்த்து குறைந்தது 5,000 வழக்குகளைத் தாக்கல் செய்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தெல்லிப்பழையில் நேற்று(29.04.2013) திங்கட்கிழமை நடைபெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் போராட்டத்தில் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இந்த அறிவிப்பை விடுத்தார்.

வழக்குகளைத் தாக்கல் செய்வதற்கு ஏதுவாக, காணி ஆவணங்களைத் தருமாறு உரிமையாளர்களிடம் அவர் கோரிக்கை முன்வைத்தார். தற்போதைய நிலையில் இலங்கையில் உள்ள நீதிமன்றங்கள் அனைத்தையும் நிரம்பும் வகையிலான போராட்டமாக இந்த 5,000 வழக்குகளையும் தாம் தாக்கல் செய்யப் போவதாகவும் அவர் கூறினார்.

மே மாதம் 2ஆம் திகதி வழக்குகள் தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

மின்கட்டணத்தைத் தளர்த்துமாறு ஜனாதிபதி பணிப்பு!

வீட்டு மின்சாரப் பாவனைக்கான கட்டண அதிகரிப்பைத் தளர்த்துமாறு ஜனாதிபதியினால் ஆணையொன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப, மின்வலு சக்தி அமைச்சு திட்டமொன்றை மேற்கொண்டு வருகின்றதென அறியவந்துள்ளது.

மின்கட்டண உயர்வினால் வீட்டுமின் பாவனையாளர்கள்பெரிதும் பாதிக்கப்படுவதனால், கட்டணத்தைக் குறைத்து அவர்களுக்குச் சலுகை வழங்குமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் வழங்கப்பட்டுள்ள பணிப்புரைக்கேற்பவே மின்கட்டணம் குறைக்கப்படவுள்ளது.

இத்திட்டத்திற்கேற்ப, மாதாந்தம் 150 அலகுகளுக்குக் குறைவாக மின்சாரத்தைப் பயன்படுத்தும் குடும்பங்களுக்கு நூற்றுக்கு 20 வீத கட்டணக் குறைவு வழங்கப்படவுள்ளதாக அமைச்சிலிருந்து நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

மின்கட்டணத்தை உயர்த்துவதன் மூலம் மின்சார சபை 3,500 கோடி ரூபாய்களை இலாபமாகப் பெறுவதற்கு உத்தேசித்திருந்தது. என்றாலும், கட்டணக் குறைப்பின் காரணமாக அந்த இலாபத் தொகை ரூபா 2,800 கோடியில் வீழ்ச்சியடைவதாகவும் குறிப்பிடப்படுகிறது.

(கேஎப்)

மது குடிக்கும் போட்டியில் படபடக்க வைத்த 80 வயது பாட்டி!

மதுகுடிக்கும் போட்டியில் தவறுதலாக பரிசுக்குரிய வைரத்தையும் சேர்த்து விழுங்கி பார்வையாளைகளை படபடக்க வைத்தார் 80 வயது அமெரிக்க பாட்டி.

அமெரிக்காவில் வாஷிங்டனில் தம்பா பெண்கள் சங்கம் உள்ளது. இந்த சங்கத்துக்கு நிதி திரட்டுவதற்காக ஷாம்பெயின்(திராட்சை ரசம் மது) குடிக்கும் போட்டி நடந்தது.

அதற்காக 400 கோப்பைகளில் திராட்சை மது ரசம் ஊற்றப்பட்டிருந்தது. அதில், ஒரு கோப்பையில் மட்டும் தனியார் நிறுவனம் அன்பளிப்பாக அளித்த ரூ.3 லட்சம் மதிப்பிலான வைரத்தை போட்டு இருந்தனர். அந்த மது கோப்பை யாருக்கு கிடைக்கிறதோ அவருக்கே அதில் போடப்பட்டிருக்கும் வைரம் சொந்தம் என அறிவிக்கப்பட்டிருந்தது. வைரத்தை வெல்ல போட்டி கடுமையாக இருந்தது.

இந்நிலையில் வைரம் போட்டிருந்த கோப்பை மிரியம் என்ற 80 வயது பெண்ணின் கைக்கு கிடைத்தது. அந்த கோப்பையில் ஊற்றப்பட்டிருந்த மதுவை குடித்த மிரியம் அப்படியே வைரத்தையும் சேர்த்து தவறுதலாக விழுங்கிவிட்டார்.

இதனால் அங்கு மது குடி போட்டியில் பங்கேற்றிருந்தவர்கள் பதற்றமடைந்தனர். பின்னர் டாக்டரிடம் விரைந்து சென்று தமது வயிற்றுக்குள் வைரம் இருப்பதை உறுதி செய்து ஒருவழியே வெளியே எடுத்து உயிர் தப்பியிருக்கிறார் மிரியம்!

பாதுகாப்பான முறையில் கணினியை இயக்க புதிய CCleaner மென்பொருள் !

கணினியின் வேகத்தை கட்டுப்படுத்தும் தற்காலிக கோப்புக்கள் உட்பட அநாவசியமான கோப்புக்களை நீக்கி சிறந்த முறையில் கணினியை இயங்குவதற்கு கைகொடுக்கும் மென்பொருளான CCleaner மென்பொருளின் புதிய பதிப்பான CCleaner 4.01 வெளியிடப்பட்டுள்ளது.

விண்டோஸ் இயங்குதளங்களுக்காக வெளியிடப்பட்ட இப்புதிய பதிப்பில் முன்னைய பதிப்பில் காணப்பட்ட சில தவறுகள் நீங்கலாக புதிய சில அம்சங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இப்பதிப்பானது அனேகமான இணைய உலாவிகளுக்கு சிறந்த ஒத்திசைவாக்கத்தினைக் கொண்டுள்ளதுடன் Windows 8 இயங்குதளத்தின் Registry – இனை சிறந்த முறையில் துப்புரவு செய்யக் கூடியதாகவும் காணப்படுகின்றன.

மேலும் File Finder, System மற்றும் Browser Monitoring எனும் இரு புதிய அம்சங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

சடலத்துடன் உடலுறவு கொண்ட நபர் : அதிர்ச்சிச் சம்பவம்!

சவூதி வைத்தியசாலையொன்றின் பிண அறையில் வேலை பார்க்கும் ஊழியர் ஒருவர் இறந்த பெண் ஒருவரின் சடலத்துடன் உடலுறவு கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். பங்காளதேசைச் சேர்ந்த சாகிர் என்ற 33 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார்.

வைத்திய சாலையின் ஏனைய ஊழியர்கள் பின்னிரவு நேரத்தில் கடமை நிறைவடைந்து திரும்பும் நிலையில் குறித்த நபர் பிண அறையில் பதுங்கியிருந்தே மேற்படி குற்றச் செயலினைப் புரியும் போது கையும் களவுமாக பிடிபட்டுள்ளார்.

சவூதி அரேபியாவின் மேற்கு மாகாண நகரங்களில் ஒன்றான மக்காவிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த வைத்தியசாலையின் சக ஊழியர் ஒருவர் சந்தேகநபரை மடக்கிப் பிடித்துள்ளதுடன் அவரது முகத்தில் பல முறை அறைந்துள்ளார். இதனை அடுத்து வைத்தியசாலை நிர்வாகம் குறித்த நபரை பொலிசாரிடம் ஒப்படைத்ததாகவும் தெரிய வருகிறது.

குறித்த பங்களாதேசை சேர்ந்த ஊழியர் பிணங்களுடன் இவ்வாறு அநாகரீகமாக நடந்து கொள்வது இது முதன் முறை அல்ல என்பதும் ஏற்கனவே பல முறை இவ்வாறு அநாகரீகமாக பிண அறையில் நடந்து கொண்டுள்ளமையும் பொலிசாருக்கு அளித்த வாக்குமூலத்திலிருந்து தெரிய வந்துள்ளது.

சவூதி அரேபியாவை பொறுத்தவரை இவ்வாறானதொரு சம்பவம் பதிவாவது இதுவே முதன் முறையாகும். இந் நிலையில் அனைத்து வைத்திய சாலைகளினதும் பிணவறைகளை கண்காணிக்கும் விதமாக கண்காணிப்பு கமராக்களை பொருத்த ஆலோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். குற்றங்கள் தொடர்பில் இறுக்கமான சட்டங்களை கொண்டுள்ள சவூதியில் குறித்த நபருக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Monday, April 29, 2013

உலக அளவில் "உள்நாட்டுக்குள் இடம்பெயர்வு அதிகரித்துள்ளது'



ஆயுத மோதல், வன்முறை மற்றும் மனித உரிமை மீறல்கள் காரணமாக உலகெங்கிலும் பல நாடுகளில் மக்கள் தங்கள் நாடுகளுக்குள்ளேயெ, முன்னெப்போதும் காணப்பட்டதை விட மிக அதிகமான எண்ணிக்கையில், தங்கள் சொந்த இடங்களை விட்டு வெளியேறியுள்ளார்கள் என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

கடந்த ஆண்டு இறுதியில் இதுபோல உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை 28.8 மில்லியனாகும் என்று ஜெனிவாவில் உள்ள உள்நாட்டு இடப்பெயர்வு கண்காணிப்பு மையம் கூறுகிறது.

சிரியாவில் மட்டுமே 2012ம் ஆண்டு இறுதி வாக்கில், 2.4 மில்லியன் பேர் உள்நாட்டுக்குள் இடம்பெயர்ந்திருக்கிறார்கள் என்று இந்த அமைப்பு கூறுகிறது.

கொலம்பியாவில்தான் மிக அதிகமான உள்நாட்டு இடம்பெயர்ந்தோர் இருக்கிறார்கள். அதற்கு அடுத்த இடத்தில் சிரியா வருகிறது. அதன் அடுத்த இடத்தில் காங்கோ ஜனநாயக் குடியரசு வருகிறது.

உள்நாட்டில் இடம்பெயர்ந்தோருக்கு, சர்வதேச எல்லைகளை கடந்து வெளியேறும் அகதிகளுக்கு இருக்கும் பாதுகாப்பான அந்தஸ்து கிடைப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ரணிலுடனான சந்திப்பில் எந்தப் பிரயோசனமும் கிடையாது'



இலங்கையின் எதிர்க்கட்சி தலைவருடனான சந்திப்பு மன்னார் மக்களுக்கு எந்தவிதமான பிரயோசனமும் இல்லாத ஒரு சந்திப்பாக அமைந்ததாக
மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவரான அருட்தந்தை ஈ. செபமாலை அவர்கள் தெரிவித்துள்ளார்.

மன்னார் ஆயரின் முன்பாக மன்னார் பிரஜைகள் குழுவைச் சேர்ந்தவர்கள் ஞாயிற்றுக்கிழமை மன்னாருக்கு விஜயம் செய்த எதிர்க்கட்சிதலைவர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து அவரிடம் மன்னார் மாவட்ட மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து முறையிட்டிருக்கிறார்கள்.

பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டின் பேரில் மன்னாரில் காணாமல் போனர்களின் உறவினர்களும் தமது குறைகளை அங்கு முன்வைத்திருக்கிறார்கள்.

அது குறித்து பிரஜைகள் குழுவின் தலைவரான அருட்தந்தை இ . செபமாலை அவர்களிடம் கேட்டபோது, தாம் காணிகள் பிரச்சினைகள் தொடர்பில் எதிர்க்கட்சி தலைவரிடம் முறையிட்டதாகவும், காணாமல் போனவர்களின் குடும்பத்தினர், மன்னாரில் காணாமல் போன 472 பேரின் பட்டியலை அவரிடம் கொடுத்து அவை குறித்து நாடாளுமன்றத்தில் பேசுமாறு எதிர்க்கட்சி தலைவரைக் கோரியதாகவும் கூறினார்.

ஆனால், எதிர்க்கட்சி தலைவரோ அவை குறித்து எந்த விதமான பதில் கருத்தும் கூறவில்லை என்றும் மாகாணசபைத் தேர்தல் போன்ற விடயங்கள் குறித்தே பேசியதாகவும் அவர் கூறினார்.

இதனால் தமது மாவட்ட மக்களுக்கு அவருடனான அந்தச் சந்திப்பினால் எந்தவிதமான பலனும் கிடையாது என்றே தான் நம்புவதாகவும் அவர் கூறினார்.

"Samaye Arunalu” Mega Carnival in Jaffna

DSC 0026
A mega carnival entertaining Jaffna people after many decades is being held at the Jaffna Municipal Council grounds. Inauguration of this grand show was held on Friday (26) with the participation of a host of distinguished guests including Minister of Traditional Industries and Small Enterprises Development Douglas Devananda, Governor Northern Province Major General (Retd) G.A. Chandrasiri, Commander Security Forces –Jaffna Major General Mahinda Hathurusinghe and Mayoress Jaffna Mrs. Y. Pathgunarasa.


On the directives of the Headquarters SF-J, this mega carnival named “Samaye Arunalu” (Rays of Peace) was organized by the 51 Division in order to entertain  northern people, especially children of Jaffna who were deprived of having such fun due to the absence of peace.

The carnival is open for the public till 30th April and on instructions of the Commander SF-J, the 51 Division organizing committee has made entrance to the carnival free for the public.

16 May Day rallies in Colombo.

MayThe United Peoples Freedom Alliance prepares to mark the May Day this year with the working masses on a grand scale.  More than one million people will participate in the UPFA May Day Rally representing the Sri Lanka Freedom Party and other alliance parties.

 The procession will start from the Nelum Pokuna Mawatha at 12.00 noon and will proceed through Horton Place, D.S. Senanayake junction and arrive at Campbell Park via Baseline Road Borella. The rally will start at 3.00 pm under the patronage of President Mahinda Rajapaksa.


 Governor of Western Province Alavi Maulana said the President as a trade union leader is ready to grant more concessions for the welfare of the working masses.

 The United National Party will hold their May Day functions at three locations.  May day functions for the people of Colombo and Kalutara districts will be held at the party Headquarters Sirikotha tomorrow morning. The May Day function of the Youth Front of the party will be held in Badulla and the main function together with the combined opposition will be held in Kurunegala.

 The National Freedom Front will start their procession from near t St. Johns College Dematagoda and will hold the rally at P.G.Sirisena Grounds under the leadership of Minister Wimal Weerawansa.

 The Left Parties will hold their rally at the Lalith Athulathmudali ground at Kirulapona.

The Janatha Vimukthi Peramuna will start their procession from the S.De.S.Jayasinghe grounds and will hold their rally at BRC Grounds in Dehiwela.

 Several rallies will be held in the upcountry in Talawakele and Nuwara Eliya.

 The police, meanwhile, have finalized all arrangements to ensure the conduct of May Day rallies smoothly.   Senior DIG Anura Senanayake said 24 May Day rallies and processions have been organized and 16 of them will be held in Colombo. Six thousand police officers will be deployed to ensure security and control traffic. It is expected that around six hundred thousand will attend this year's May Day rallies. All measures have been taken to ensure security of the public. Drivers are requested to use alternative roads to avert temporary traffic congestion. Essential services such as transporting passengers to the airport and patients to hospitals will be facilitated.

 It is expected that about ten thousand buses will bring May Day participants to Colombo from outstations. All arrangements have been made to ensure the security of participants coming from outstations. 172 motorcycle traffic units will also be in operation.

முஸ்லிம் ஆலோசனை சபை அங்குரார்ப்பணம்


sura
முஸ்லிம் இயக்க பிரதிநிதிகளையும் சமூக ஆர்வலர்களையும் கொண்ட அரசியல் கலப்பற்ற முஸ்லிம் ஆலோசனை சபை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

சமூகத்தில் ஒரு இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் முகமாக முஸ்லிம் கவுன்ஸில் ஒப் ஸ்ரீலங்கா- ஏற்பாடு செய்த கூட்டமொன்றில் உலமாக்கள்- முஸ்லிம் இயக்கப் பிரதிநிதிகள்- வர்த்தகர்கள்- கல்விமான்கள் மற்றும் துறைசார் நிபுணர்கள் ஆகியோரைக் கொண்ட ஆலோசனை சபை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

எழுபத்தைந்துக்கும் அதிகமான முக்கியஸ்தர்களைக் கொண்ட இந்தச் சபை முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை அடையாளம் கண்டு அவற்றைத் தீர்ப்பதற்கான குறுகிய கால இடைக்கால- நீண்டகால திட்டங்களை வகுத்து செயல்பட உள்ளதோடு நாட்டில் சமாதான- சகவாழ்வுக்காகவும் பாடுபடும்.

ஹம்பாந்தோட்டையில் நவீன ஆஸ்பத்திரி

hospitalஹம்பாந்தோட்டையில் 700 கோடி ரூபா செலவில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய ஆஸ்பத்திரியொன்றை நிர்மாணிக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
850 கட்டில்களுடன் கூடிய மேற்படி ஆஸ்பத்திரி நெதர்லாந்து அரசாங்கத்தின் உதவியுடன் நிர்மாணிக்க நடவடிக்கை எடுப்பதாக சுகாதார அமைச் சர் மைத்திரிபால சிறிசேன தனக்கு அறி வித்துள்ளதாக சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.


ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலுள்ள மாகாண ஆஸ்பத்திரிகளில் ஏதும் குறை பாடு இருந்தால் அவற்றை நிவர்த்திக்க நடவடிக்கை எடுக்குமாறும் சுகாதார அமைச்சர் ஆலோசனை வழங்கி உள்ளார்.

இதன்படி சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகம் டாக்டர் பாலித மஹிபால- சுகாதார சேவைப் பணிப்பாளர் டொக்டர் லால் பனாபிடிய- அடங்கலான குழு ஹம்பாந்தோட்டையிலுள்ள ஆஸ்பத்திரிகளை நேரில் சென்று பார்வையிட்டது.

இதன் போது ஆஸ்பத்திரிகளில் காணப்படும் குறைபாடுகளை தீர்க்கவும் மருத்துவர்கள் மற்றும் தாதிமார்களின் குறைபாட்டை நிவர்த்திக்கவும் மருத்துவ உபகரணங்கள் மற்றும் கட்டட திருத்தப் பணிகள் மேற்கொள்ளவும் நிதி ஒதுக்கீடு செய்ய தீர்மானிக்கப்பட்டது.

இந்த விஜயத்தில் பங்கேற்ற சபாநாயகர் சமல் ராஜபக்ஷ- புதிய கட்டட நிர்மாணப் பணிகள் மே மாதத்தில் ஆரம்பிக்கப்படும் என்றார்.

நெதர்லாந்து அரசாங்கம் இலங்கையில் இரு ஆஸ்பத்திரிகளை நிர்மாணிக்க நிதி உதவி வழங்க முன்வந்துள்ளது. இதில் முதலாவது ஆஸ்பத்திரி நுவரெலியா ஆஸ்பத்திரிக்கு அருகில் நிர்மாணிக்கப்பட்டு வருவதோடு இரண்டாவது ஆஸ்பத்திரி ஹம்பாந்தோட்டையில் நிர்மாணிக்கப்பட உள்ளது

மட்டு காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பிரதி இயக்குநரை விரட்டியடிக்க கருணா முயற்சி.

மட்டக்களப்பு மாவட்ட காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பிரதி இயக்குனராக உள்ளார் மனோகரன். இவருக்கு மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து யாழ் மாவட்டத்திற்கு இடமாற்ற உத்தரவு கிடைக்கப்பெற்றுள்ளதாம்.
இந்த இடமாற்றத்தின் பின்னணியில் கருணா எனப்படுகின்ற வினாயகமூர்த்தி முரளிதரன் உள்ளதாக அறியக்கிடைக்கின்றது. கருணாவின் உத்தரவுகளை மனோகரன் செயற்படுத்தவில்லை என்றும் அவருக்கு கைப்பொம்மையாக இருக்க வில்லை என்றுமே இவருக்கான இடமாற்றம் தயார் செய்யப்பட்டதாக அலுவலக வட்டாரங்களில் இருந்து இலங்கைநெற் இற்கு தகவல் கிடைத்தது.


இது தொடர்பாக நாம் மனோகரனை தொடர்பு கொண்டு கேட்டபோது, இடமாற்ற உத்தரவு வந்துள்ளதாகவும் அதனை செயலிழக்க செய்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்த அவர் ஊடகங்களுக்கு மேலதிகமாக எவ்வித கருத்தும் தெரிவிக்க முடியாது என்றார்.

இலங்கையில் விடுதலைப்போராட்டம் என்ற பெயரில் ஆயுதக்குழுக்கள் உருவாகின. அவர்கள் மக்களின் உரிமைகளுக்காக போராடுவதாக கூறிக்கொண்டு மக்களின் உரிமைகளை பறித்ததே வரலாறு கண்ட உண்மை. அதற்கு வடகிழக்கு தமிழ் அதிகாரிகளும் முக்கிய பங்கு வகித்திருக்கின்றார்கள். அதிகாரிகள் தமது கடமைகளை சரிவர செய்வதை விடுத்து ஆயுததாரிகளுக்கு தலையாட்டும் பொம்மைகளாக செயற்பட்டு வடகிழக்கின் நிர்வாகத்தை ஆயுததாரிகளிடம் கையளித்திருந்தனர்.

இலங்கை அரசிடம் சம்பளத்தை பெற்றுக்கொண்டு மக்களுக்கு சேவை செய்யாமல் ஆயுதக்குழுக்களுக்களின் முன் கைகட்டி மண்டியிட்டு நின்ற அதிகாரிகளின் செயற்பாடுகளாலேயே மக்கள் ஆயுததாரிகளுக்கு கட்டுப்படவேண்டிய நிர்ப்பதந்தம் எற்பட்டது என்பது வரலாற்று துரோகம் ஆனால் இத்துரோகம் தொடர்ந்தும் அனுமதிக்கப்பட முடியாதது.

இன்று பயங்கரவாதிகளிடமிருந்து இலங்கை மீட்கப்பட்டிருக்கின்றது. முன்னாள் பயங்கரவாதிகள் இன்று அரசியல்வாதிகளாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் இன்றும் முன்னாள் பயங்கரவாதிகளின் முன் வடகிழக்கு அதிகாகரிகள் மண்டியிட்டு நிற்கவே செய்கின்றனர்.

அதிகாரிகளின் இச்செயற்பாடுகள் நீடிக்குவரை முன்னாள் ஆயுததாரிகளின் ஆதிக்கம் நிலைத்து நிற்கவே செய்யும்.

எனவே அதிகாரிகள் மீது முன்னாள் ஆயுததாரிகள் ஆழுமை செலுத்த முற்படுகின்றபோது, அதை எதிர்த்து நிற்க தம்மை தயார்படுத்திக்கொள்ளவேண்டும்.

மனோகரன் தனது இடமாற்றத்தை தனக்கு உள்ள தொடர்புகள் ஊடாக செயலிழக்க செய்து கொள்ளலாம். ஆனால் மனோகரன் இதேபோன்றதோர் அநீதி சக ஊழியர் ஒருவருக்கு இடம்பெறக்கூடாது என நினைத்திருப்பாராக இருந்திருந்தால் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்க முடியாது என தெரிவித்திருக்க மாட்டார். மாறாக அநீதிக்கு எதிராக பின்கதவால் கள்ளக்கோழி பிடிக்காமல் வெளிப்படையாக செயற்பட்டிருக்க முடியும்.

அதாவது என்றோ ஒருநாள் நான் கருணாவின் காலில் விழவேணடி வரும் நான் அவரை பகைத்துக்கொள்ளக்கூடாது என்பது மனோகரனின் எதிர்பார்ப்பு.

சக அதிகாரி ஒருவனுக்கு எதிர்காலத்தில் இதுபோன்று அநீதி இடம்பெறக்கூடாது என்ற பொது நோக்கம் மனோகரனுக்கு மாத்திரமல்ல வடகிழக்கிலுள்ள அதிகாரிகள் 98 விழுக்காடு அதிகாரிகளிடம் இல்லை என்பது கவலைக்குரியதே.

ஹம்பாந்தோட்டையில் வைத்தியசாலை கட்ட நெதர்லாந்து 700 கோடி நிதியுதவியளிக்கின்றது.

நெதர்லாந்தின் நிதியுதவில் 700 கோடி ரூபா செலவில் 650 கட்டில்களுடன் நவீன மருத்துவ உபகரணங்கள் அடங்கிய வைத்தியசாலையொன்று ஹம்பாந்தோட்டையில் நிர்மாணிக்கப்படவுள்ளதென சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டை வைத்தியசாலை உட்பட அதனை அண்டிய பிரதேசங்களில் உள்ள ஏனைய வைத்தியசாலைகளின் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு, நிதி உதவியளிக்கும் வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே, சபாநாயகர் இதனை தெரிவித்துள்ளார்.

நானா .. நீயா.. கருணா கொக்கட்டிச்சோலையில்.. அருண் தம்பிமுத்து வந்தாறுமூலையில்..

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதி தலைவராக உள்ளார் கருணா எனப்படுகின்ற வினாயகமூர்த்தி முரளிதரன். இதேகட்சியின் மட்டக்களப்பு மாவட்ட தேசிய அமைப்பாளராக உள்ளார் சாம் தம்பிமுத்துவின் மகன் அருண். இவர் புலிகளை மஹிந்தர் சமாதி கட்டிய பின்னர் அரசியலுக்கு வந்துள்ளார்.

ஆழும் கட்சியின் பங்காளிகளான கருணா , பிள்ளையானிடையே இருந்து வந்து வந்த „நானா நீயா' என்ற போட்டிக்குள் அதிரடியாக நுழைந்த அருண் நீங்கள் இருவருமே இல்லை „நான்தான்' என்று நிற்கின்றார்.

நாளை தொழிலாளர்தினம். சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதான மேதின ஊர்வலம் கொழும்பில் இடம்பெறவுள்ளது. இந்த ஊர்வலத்திற்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சகல மாவட்டங்களிலிருந்தும் அந்தந்த மாவட்டங்களின்; கட்சிப் பிரமுகர்கள் தங்கள் ஆதரவாளர்களை அழைத்துச் செல்வது வழக்கம். தொழிலாளர் தினக் கொண்டாட்டத்திற்காக என்பதை விட தங்களுக்கு பிரதேசத்தில் எத்தனை ஆதரவாளர்கள் உள்ளார்கள் என்பதை கட்சியின் நிருபித்துக்காட்ட என்றால் பொருத்தமானதாகும்.

இந்நிலையில் கருணாவும் அருணும் தமக்கு பிரதேசத்திலுள்ள செல்வாக்கினை நிருபித்துக்காட்ட களமிறங்கியுள்ளார்கள். கருணா கொக்கட்டிச்சோலை பிரதேசத்திலும் அருண் வந்தாறுமூலைப் பிரதேசத்திலும் பேருந்துகளை தயார் செய்துள்ளார்கள்.

பின்லேடனை காட்டிக் கொடுத்த டாக்டர் உண்ணாவிரதம்!

அல்கொய்தா தீவிரவாத இயக்கத் தலைவர் ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானில் உள்ள அபோதாபாத்தில் அமெரிக்க அதிரடிப் படையால் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரை பாகிஸ்தானை சேர்ந்த ஷகில் அப்ரிடி என்ற டாக்டர் அமெரிக்க உளவுப் படையான சிஐஏவிடம் காட்டிக்கொடுத்தார். சிறையில் அடைக்கப்பட்டுள்ள டாக்டர் தற்போது சிறையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

நோய் தடுப்பு முகாம் நடத்துவது போன்று போலியாக நாடகமாடி பின்லேடன் பதுங்கி இருந்த பங்களைாவுக்குள் நுழைந்தார். அங்கு பின்லேடனின் மனைவி மற்றும் குழந்தைகளிடமிருந்து ரத்த மாதிரிகளை சேகரித்தார். பின்னர் மரபணு பரிசோதனை மூலம் அங்கு பதுங்கி இருப்பது பின்லேடன் தான் என்பதை உறுதி செய்தார். அதைத் தொடர்ந்து அங்கு புகுந்த அமெரிக்க ராணுவம் பின்லேடனை சுட்டுக்கொன்றது. அவர் கொல்லப்பட்டவுடன் டாக்டர் ஷரில் அப்ரிடியை பாகிஸ்தான் அரசு கைது செய்து கராச்சி சிறையில் அடைத்தது.

இவருக்கு பாகிஸ்தானில் தடை செய்யப்பட்டுள்ள லஸ்கர் இ இஸ்லாம் என்ற தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் சிறையில் இருக்கும் இவர் அங்கு உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார். சிறை அதிகாரிகள் அவரை கொடுமைப்படுத்துவதாகவும் அவமரியாதையாக நடத்துவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

கொழும்பு நகரில் 17 மேதின ஊர்வலங்கள்.

பாட்டாளி மக்களின் உரிமைக்குரல் எழுப்பப்படும் மே முதலாம் திகதி கொழும்பு நகரில் 17 மே தின ஊர்வலங்கள் உட்பட 16 கூட்டங்கள் நடைபெறவுள்ளன. இதனையொட்டி, விசேட பாதுகாப்பு ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மே முதலாம் திகதி கொழும்பு நகரின் போக்குவரத்து ஒழங்குகள் மற்றும் பாதுகாப்பு தொடர்பில், அறிவுறுத்தும் செய்தியாளர் மாநாடு, கொழும்பு பிரதி பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அநுர சேனாநாயக தலைமையில் இடம்பெற்றது. இம்மாநாட்டில் பேசிய பிரதி பொலிஸ் மா அதிபர் அநுர சேனாநாயக மே தினத்தில் கொழும்பு நகரின் பாதுகாப்பிற்கென, விசேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மே தினம் பொது விடுமுறை என்பதனால், அலுவல்களுக்காக கொழும்பு நகருக்கு வருகை தருவதை மட்டுப்படுத்திக்கொள்ளுமாறு, அநுர சேனாநாயக, மக்களை கேட்டுள்ளார். ஊர்வலங்கள் மற்றும் கூட்டங்கள் காரணமாக, பல பிரதான வீதிகளில் போக்குவரத்து ஒழுங்குகள் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளன. இதன்மூலம் ஏற்படக்கூடிய சிரமங்களை தவிர்ப்பதற்காக, கொழும்பு நகரில் பிரவேசிக்கும்போது மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு, அநுர சேனாநாயக அவர் கேட்டுள்ளார்.

சர்வதேச தொழிலாளர் தினத்தை கொண்டாடுவதற்கு, கொழும்பு நகரில் அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. போதியளவு பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொலிஸார், கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வாகன போக்குவரத்து ஒழுங்குகளை மேற்கொள்ளவும், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குழப்பகரமான நிலைமைகள் ஏற்படுவதை தடுக்க, அனைவரும் ஒத்துழைப்பு வழங்குவதன் மூலம், மே தினத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாட எமக்கு சந்தர்ப்பம் கிடைக்கும் போக்குவரத்து நிர்வாக மற்றும் வீதி பாதுகாப்பு தொடர்பான பிரதி பொலிஸ் மா அதிபர் அமரசிறி சேனாரட்ன, வாகன போக்குவரத்து திட்டமிடல்கள் தொடர்பில் பொது மக்கள் சிறந்த விளக்கத்துடன் செயற்பட வேண்டுமென, கேட்டுள்ளார். இத்தினங்களில் பல வீதிகளில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.

பிரதான ஊர்வலம், தாமரை தடாகத்திலிருந்து க்ரீன்பாத் வீதி வரை இடம்பெறும். காலை 09.00 மணிக்கு இந்த வீதி மூடப்படும். பிரதான ஊர்வலம் நண்பகல் 12.00 மணிக்கு ஆரம்பமாகும். பொரளை ஊடாக வரும் வாகனங்கள் பழைய புலொஸ் வீதி ஊடாக செல்ல வேண்டும். பித்தல சந்தியிலிருந்து தர்மபால மாவத்தை ஊடாக ஊர்வலம் செல்லும்போது, ஊர்வலத்தில் செல்லும் வாகனங்கள் மற்றும் அப்பிரதேசத்தில் வசிப்போரின் வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். பித்தல சந்தியிலிருந்து நகர மண்டபம் வரை, இவ்வாறு வாகன போக்குவரத்து ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருக்கும்.

நுகேகொடையிலிருந்து பத்தரமுல்ல ஊடாக கண்டி மற்றும் நீர்கொழும்பு செல்லும் வாகனங்கள், வெலிகட சந்தியிலிருந்து ஓபேசேகரபுர வீதியுடாக, கொலன்னாவை நீர்த்தாங்கி ஊடாக, வெல்லம்பிட்டி பொலிஸ், ஒறுகொடவத்த ஊடாக, கண்டி வீதிக்கு செல்ல முடியும். கடுகதி வீதியூடாக வரும் வாகனங்கள், மாலபே, கடுவெல, களனி ஊடாக கட்டுநாயக வீதியை சென்றடைவதற்கான ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தேர்தலில் நிற்க எனக்கு விருப்பம் என்றாலும் கூட்டணி ஒன்றும் சொல்லுதில்லையே? - விசனப்படுகிறார் தயா மாஸ்டர்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் வட மாகாணத் தேர்தலில் போட்டியிட தனக்கொரு சந்தர்ப்பம் பெற்றுத்தருமாறு கேட்டபோதும், இன்றுவரை அதற்கு எந்தவொரு பதிலையும் தரவில்லை என முன்னாள் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் குறிப்பிடுகிறார்.

போரினால் நிர்க்கதியாகியிருக்கும் தமிழ் மக்களின் வாழ்க்கையை மீளவும் கட்டியெழுப்புவதே தனது உயரிய இலட்சியம் என்றும், விடுதலைப் புலிகளில் இயக்கத்திலிருந்து சுதந்திரம் பெற்றுள்ள விடுதலைப் புலி உறுப்பினர்கள் ஏராளமானோர் உள்ளனர். அவர்கள் வாழும் வழி யாதென்று தெரியாமல் துன்புற்றுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களது துன்பங்களைத் துடைப்பதற்கு தான் எண்ணியுள்ளதனால் அரசாங்கம் சார்பாக தனது பெயரையும் பதிந்துகொள்ள தான் விரும்பியுள்ளதாகவும் அவர் ஊடகம் ஒன்றிற்கு தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வட மாகாணத்தைச் சேர்ந்த இரண்டு முன்னணி அரசியலாளர்கள் தம்மைச் சந்தித்து அவ்வக் கட்சிகளில் போட்டியிடுமாறு கேட்டுள்ளனர். என்றாலும், தான் ஒருபோதும் அவற்றைச் சார்ந்து அவற்றுக்கு விருப்புத் தெரிவிக்க மாட்டேன் எனவும் தயா மாஸ்டர் குறிப்பிட்டுள்ளார்.

(கேஎப்)

மட்டு காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பிரதி இயக்குநரை விரட்டியடிக்க கருணா முயற்சி.

மட்டக்களப்பு மாவட்ட காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பிரதி இயக்குனராக உள்ளார் மனோகரன். இவருக்கு மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து யாழ் மாவட்டத்திற்கு இடமாற்ற உத்தரவு கிடைக்கப்பெற்றுள்ளதாம். இந்த இடமாற்றத்தின் பின்னணியில் கருணா எனப்படுகின்ற வினாயகமூர்த்தி முரளிதரன் உள்ளதாக அறியக்கிடைக்கின்றது. கருணாவின் உத்தரவுகளை மனோகரன் செயற்படுத்தவில்லை என்றும் அவருக்கு கைப்பொம்மையாக இருக்க வில்லை என்றுமே இவருக்கான இடமாற்றம் தயார் செய்யப்பட்டதாக அலுவலக வட்டாரங்களில் இருந்து இலங்கைநெற் இற்கு தகவல் கிடைத்தது.

இது தொடர்பாக நாம் மனோகரனை தொடர்பு கொண்டு கேட்டபோது, இடமாற்ற உத்தரவு வந்துள்ளதாகவும் அதனை செயலிழக்க செய்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்த அவர் ஊடகங்களுக்கு மேலதிகமாக எவ்வித கருத்தும் தெரிவிக்க முடியாது என்றார்.

இலங்கையில் விடுதலைப்போராட்டம் என்ற பெயரில் ஆயுதக்குழுக்கள் உருவாகின. அவர்கள் மக்களின் உரிமைகளுக்காக போராடுவதாக கூறிக்கொண்டு மக்களின் உரிமைகளை பறித்ததே வரலாறு கண்ட உண்மை. அதற்கு வடகிழக்கு தமிழ் அதிகாரிகளும் முக்கிய பங்கு வகித்திருக்கின்றார்கள். அதிகாரிகள் தமது கடமைகளை சரிவர செய்வதை விடுத்து ஆயுததாரிகளுக்கு தலையாட்டும் பொம்மைகளாக செயற்பட்டு வடகிழக்கின் நிர்வாகத்தை ஆயுததாரிகளிடம் கையளித்திருந்தனர்.

இலங்கை அரசிடம் சம்பளத்தை பெற்றுக்கொண்டு மக்களுக்கு சேவை செய்யாமல் ஆயுதக்குழுக்களுக்களின் முன் கைகட்டி மண்டியிட்டு நின்ற அதிகாரிகளின் செயற்பாடுகளாலேயே மக்கள் ஆயுததாரிகளுக்கு கட்டுப்படவேண்டிய நிர்ப்பதந்தம் எற்பட்டது என்பது வரலாற்று துரோகம் ஆனால் இத்துரோகம் தொடர்ந்தும் அனுமதிக்கப்பட முடியாதது.

இன்று பயங்கரவாதிகளிடமிருந்து இலங்கை மீட்கப்பட்டிருக்கின்றது. முன்னாள் பயங்கரவாதிகள் இன்று அரசியல்வாதிகளாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் இன்றும் முன்னாள் பயங்கரவாதிகளின் முன் வடகிழக்கு அதிகாகரிகள் மண்டியிட்டு நிற்கவே செய்கின்றனர்.

அதிகாரிகளின் இச்செயற்பாடுகள் நீடிக்குவரை முன்னாள் ஆயுததாரிகளின் ஆதிக்கம் நிலைத்து நிற்கவே செய்யும்.

எனவே அதிகாரிகள் மீது முன்னாள் ஆயுததாரிகள் ஆழுமை செலுத்த முற்படுகின்றபோது, அதை எதிர்த்து நிற்க தம்மை தயார்படுத்திக்கொள்ளவேண்டும்.

மனோகரன் தனது இடமாற்றத்தை தனக்கு உள்ள தொடர்புகள் ஊடாக செயலிழக்க செய்து கொள்ளலாம். ஆனால் மனோகரன் இதேபோன்றதோர் அநீதி சக ஊழியர் ஒருவருக்கு இடம்பெறக்கூடாது என நினைத்திருப்பாராக இருந்திருந்தால் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்க முடியாது என தெரிவித்திருக்க மாட்டார். மாறாக அநீதிக்கு எதிராக பின்கதவால் கள்ளக்கோழி பிடிக்காமல் வெளிப்படையாக செயற்பட்டிருக்க முடியும்.

அதாவது என்றோ ஒருநாள் நான் கருணாவின் காலில் விழவேணடி வரும் நான் அவரை பகைத்துக்கொள்ளக்கூடாது என்பது மனோகரனின் எதிர்பார்ப்பு.

சக அதிகாரி ஒருவனுக்கு எதிர்காலத்தில் இதுபோன்று அநீதி இடம்பெறக்கூடாது என்ற பொது நோக்கம் மனோகரனுக்கு மாத்திரமல்ல வடகிழக்கிலுள்ள அதிகாரிகள் 98 விழுக்காடு அதிகாரிகளிடம் இல்லை என்பது கவலைக்குரியதே.

விமல்-பிந்து மாதவி ஜோடியின் கிளு கிளு ஆட்டம்

ஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் வழங்க ஒலிம்பியா மூவிஸ் படநிறுவனம் தயாரிக்கும் படம் 'தேசிங்கு ராஜா'.
இந்தப் படத்தில் விமல் கதாநாயகனாக நடிக்கிறார், கதாநாயகியாக பிந்து மாதவி நடிக்கிறார்.

இவர்களுடன் சூரி, சார்லி, சிங்கம்புலி, சிங்கமுத்து, ரவிமரியா, சாம்ஸ் ஆடுகளம் நரேன், ஞானவேல், வடிவுக்கரசி ஆகியோர் நடிக்கிறார்கள்.


இப்படத்திற்காக சமீபத்தில் விமல் – பிந்து மாதவி பங்கேற்ற
“அம்மாடி அம்மாடி
அய்யோடி அய்யோடி
நெருங்கி ஒரு தடவை பார்க்கவா”
என்ற கிளு கிளு பாடல் காட்சி படமாக்க அரங்கம் அமைக்கப்பட்டது. அதற்காக 15 லட்சம் ரூபாய் செலவில் பழ குடோன் அரங்கம் அமைக்கப்பட்டது.
பத்து நாட்கள் இப்பாடல் காட்சி அதிக பொருட்செலவில் படமாக்கப்பட்டது.
கொமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டுள்ளது இந்த தேசிங்கு ராஜா என்கிறது பட வட்டாரம்.
தொழில்நுட்ப கலைஞர்கள்
வசனம் : ராஜசேகர்.
ஒளிப்பதிவு : சூரஜ் நல்லுசாமி.
பாடல்கள் : யுகபாரதி.
இசை - இமான்.
கலை : சிவராஜ்.
எடிட்டிங் : கோபி கிருஷ்ணா.
நடனம் : தினேஷ், தினா பிருந்தா.
ஸ்டன்ட் : திலீப் சுப்புராயன்.
தயாரிப்பு மேற்பார்வை : சங்கரதாஸ்.
தயாரிப்பு நிர்வாகம் : ராஜா.
கதை, திரைக்கதை, இயக்கம் பொறுப்பேற்றிருப்பவர் : எஸ்.எழில்.

நோர்வே திரைப்பட விழாவில் பிரபு சாலமனுக்கு விருது

நோர்வே தமிழ் திரைப்பட விருது வழங்கும் விழாவில் இயக்குனர் பிரபு சாலமனுக்கு சிறந்த இயக்குனர் என்ற விருது வழங்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் நோர்வே நாட்டில் நடைபெற்று வரும் நோர்வே தமிழ்த் திரைப்பட விருது இந்த ஆண்டும் கோலகலமாக தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.


பிரபு சாலமன் இயக்கத்தில் உருவாக கும்கி படம் ரசிகர்களின் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றிருந்தது.
இந்த திரைப்பட விழாவில் கும்கி படத்திற்கு சிறந்த இயக்குநருக்கான விருது கிடைத்துள்ளது. இந்த விருதை கும்கி படத்தின் இயக்குநர் பிரபு சாலமன் பெற்றுக்கொண்டார்.

உல்லாசப்பயணிகள் பங்கு பற்றிய சித்திரைப்புத்தாண்டு விழா!

பொருளாதார அபிவிருத்தி அமைBeauty Queen and Mr.Handsomeச்சின் வழிகாட்டலின் கீழ் இலங்கை உல்லாச பயணிகள் அபிருத்தி பணியகம் ஏற்பாடு  செய்த "Srilanka Hospitality" என்ற தலைப்பிலான  சிங்கள தமிழ் சித்திரை புத்தாண்டு விளையாட்டு விழா நேற்று முந்தினம் நீர் கொழும்பு கடற்கரையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

முற்றிலும் வெளிநாட்டு உல்லாச பிரயானிகள் கலந்துக் கொண்ட இந்த விழாவில் ,இலங்கையின் தனித்துவமான விளையாட்டுப்போட்டிகள் இடம் பெற்றன. இலங்கை உல்லாச பயணிகள் அபிருத்தி பணியகப் பணிப்பாளரான ரூமி ஜவ்பர் மேல் மாகாண உல்லாச  சபை  தலைவர் கிளாட் தோமஸ் ஆகியோர் இவ்விழாவில் பிரதம அதிதிகளாக கலந்துக் கொண்டனர்.

ரஷ்யாவிலிருந்து வருகை தந்திருந்ந உல்லாச பயணியான செவின்னியா கொடென்கோ  2023ஆம் ஆண்டுக்கான உல்லாச அழகு ராணியாகவும் அதேநாட்டைச் சேர்ந்த சோட்டா கிலாட்சே உல்லாச ஆணழகனாகவும் தெரிவு செய்யப்பட்டனர்.

சித்திரை புத்தாண்டில் இடம்பெறும் பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் அனைத்திலும் உல்லாசப்பயணிகள் மிகவும் ஆர்வத்துடன் பங்கு பற்றினர். இவர்களுக்கு இலங்கையின் பாரம்பரிய முறைப்படி  பாற்சோறு பலகாரம் போன்றவையும் பரிமாறப்பட்டன.

இலங்கைக்கான பிலிப்பைன் தூதுவர்- பிரதமர் சந்திப்பு!



Pilipineதனது சேவைக்காலத்தை முடித்துக்கொண்டு தாயகம் செல்லவிருக்கும் இலங்கைக்கான பிலிப்பைன் தூதுவர்  H.E.Bahmorim Abu Guinomla , பிரதமர் தி .மு.ஜயரத்னவை சந்தித்துரையாடினார்.


பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் அமைந்துள்ள பிரதமர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம் பெற்றது.

யாழ். ஊடக அமையம் நிறுவப்பட்டமை பாராட்டத்தக்கது!


- அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!
     
media2யாழ். ஊடக அமையம் நிறுவப்பட்டமை பாராட்டத்தக்கது என்றும் அதன் நோக்கம் சரியானதாகவும், நேர்மையானதாகவும் இருக்க வேண்டுமென்பதுடன் ஊடகங்களும், ஊடகவியலாளர்களும் பக்கசார்பின்றி உண்மைச் செய்திகளை வெளியிடுவதே முக்கியமானது என்றும்  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா  சுட்டிக்காட்டியுள்ளார்.
media1
யாழ்ப்பாணம் இராசாவின் தோட்டம் வீதியிலமைந்துள்ள யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர்களுடனான கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ஊடகங்கள் பலப்படுத்தப்பட வேண்டுமென்பதுடன் அவை உண்மை மற்றும் நேர்மையான வழியில் பயணிக்கும் பட்சத்தில் அவற்றுக்கு முழுமையான பங்களிப்பை வழங்கத் தயாராகவுள்ளேன் .

.அத்துடன் அமையத்தின் நோக்கம் சரியானதாகவும், நேர்மையானதாகவும் இருக்க வேண்டுமென்பதுடன் இதற்கென ஒழுக்கநெறிக் கோவை அமைத்து செயற்பட வேண்டுமென்பதுடன் உண்மைச் செய்திகளை துறைசார்ந்தோரிடம் கேட்டறிந்து வெளிக்கொணர்வது ஊடகங்களின் முக்கிய பணியாகவுள்ளது. அதைவிடுத்து நடக்காததொன்றை திரிபுபடுத்தி பொய்ச்செய்திகளை வெளியிட வேண்டாமென அமைச்சர்  கேட்டுக் கொண்டார் .

மக்கள் தமது கருத்து, பேச்சு, தொழில் உள்ளிட்ட சகல விடயங்களிலும் சுதந்திரமாக செயற்படவேண்டுமெனவும் தெரிவித்தார்.அத்துடன் அவ்வப்போது ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவேண்டிய பொறுப்பு ஊடகங்களுக்கு உண்டென்றும், அதனை தூண்டவேண்டாமென்றும் கடந்த காலங்களில் ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கிய இடர்பாடுகள் பிரச்சினைகள் மற்றும் தீர்வுகள் குறித்தும் தெளிவுபடுத்தினார்.

யாழ்.ஊடகவியலாளர்களுக்கு அடையாள அட்டைகளைப் பெற்றுக் கொடுப்பது, ஊடக அமையத்துக்கென நிரந்தரக் கட்டிடம் அமைப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்;டதுடன் அதற்கேற்ப நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுமென்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா  தெரிவித்தார்.

கலந்துரையாடலின் போது ஈ.பி.டி.பியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா உடனிருந்தார்.

சகல சமயங்களினதும் விழாக்களை கொண்டாடி சமயங்களுக்கிடையிலான உறவை வலுப்படுத்தட்டாம். மஹிந்தர்.

சகல சமயங்களினதும் விழாக்களை அதிவிமர்சையாக கொண்டாடி, நாட்டில் சமயங்களுக்கிடையிலான நல்லுறவினை கட்டியெழுப்புவோம் என, ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

புத்த ரஷ்மி தேசிய வெசாக் வலயம் வருடந்தோறும் ஜனாதிபதி செயலகம், ஹூனுபிட்டிய கங்காராம விஹாரையின் ஏற்பாட்டில் இடம்பெறுகிறது. இதன் நிகழ்வுகள் தொடர்பில் அலரி மாளிகையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையிலேயே, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு கூறினார்.


அலரி மாளிகையில், பேரே வாவி மற்றும் காங்காராம விஹாரையை கேந்திரமாகக் கொண்டு, புத்த ரஷ்மி வெசாக் வலயம் இம்முறை அதிவிமர்சையாக கொண்டாட, ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சமய விழாவாக மாத்திரமன்றி, எமது பாரம்பரிய உரிமைகளையும், கலாசாரத்தையும் சித்தரித்துக்காட்டும் வகையில், இவ்விழாவை ஒழுங்கு செய்ய வேண்டியதன் முக்கியத்துவத்தை, ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

பெற்ற சுதந்திரத்தை பாதுகாத்து, சுபீட்சமிகுந்த தேசத்தை கட்டியெழுப்புவதற்காக, இன மத பேதங்களை மறந்து, செயற்பட வேண்டியதன் அவசியத்தையும், ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

வெசாக் வலயத்தை பார்வையிட வருகை தரும் வடக்கு கிழக்கு மாகாண பாடசாலை மாணவர்களுக்கும், விசேட வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் வெசாக் வலய வெளிச்சக்கூட்டு போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு, சான்றிதழ்களும், பணப் பரிசில்களும் வழங்கப்படவுள்ளன.
இந்த பேச்சுவார்த்தையில் ஹூனுபிட்டிய கங்காராம விஹாராதிபதி கலபொட ஞானிஸ்ஸர தேரர், கலாநிதி சங்கைக்குரிய கிரிந்தே அஸ்ஸஜீ தேரர் உள்ளிட்ட மகாசங்கத்தினர், அமைச்சர் தினேஷ் குணவர்தன உட்பட பலர், கலந்து கொண்டுள்ளனர்.

அரசாங்கம் என்னை விரட்டிவருகிறது...அதனால் நான் மறைந்திருக்கிறேன்...-அஸாத் ஸாலி

பாதுகாப்புப் பிரிவினரால் தன்னைக் கைது செய்வதற்கு சூட்சுமங்கள் நடைபெற்றுவருவதால் தான் மறைந்து வாழ்வதாக தமிழ் முஸ்லிம் ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் ஸாலி குறிப்பிட்டார்.

மறைந்து கொண்டு தனியார் தொலைக்காட்சிச் சேவையொன்றுக்கு, கைத்தொலைபேசி மூலம் கருத்துரைத்த அஸாத்ஸாலி மேலும் குறிப்பிட்டதாவது,

'கடந்த சில காலங்களாக என்னைக் கைது செய்வதிலேயே குறியாய் இருக்கிறார்கள். குறுந்தகவல் அனுப்பியதாய்ச் சொல்கிறார்கள், பயங்கரவாதிகளுக்கு உடந்தையாய் இருப்பதாகச் சொல்கிறார்கள், அல்கைதா என்கிறார்கள்... இவ்வாறு பல்வேறு பெயர்களில் என்னை அழைக்கிறார்கள். ஏதேனும் குற்றங்களை எப்படியேனும் என்தலைமேல் சுமத்தி என்னைக் கைது செய்ய முயற்சி செய்கிறது அரசாங்கம்...! நாங்கள் ஒருபோதும் பிழையான எதனையும் சொல்லவில்லை. சரியானதைத்தான் சொன்னோம். தாங்களே எங்களிடம் உடன்பட்ட '13 ப்ளஸ்' தரச் சொல்கிறீர்கள்... எல்எல்ஆர்ஸியினை செயற்படுத்துமாறு கூறுகிறீர்கள்... நாங்கள் அவ்வாறு குறிப்பிடும்போது உங்களுக்கு வலிக்கிறது.... அதனால், ஏதேனும் ஒருவிடயத்தை முன்கொணர்ந்து அஸாத் ஸாலியை கைது செய்வதற்கே அரசாங்கம் முயற்சி செய்கிறது. இப்போது நான் மறைந்திருந்திருக்கிறேன்... என் உயிருக்குப் பேரபாயம் காத்திருக்கிறது'

(கேஎப்)

மின்கட்டண உயர்வுக்கு எதிரான பிரேரணை மாத்தறை பிரதேச சபையில் வெற்றி!

நேற்று முன்தினம் அரசாங்கத்தால் மின்சாரக் கட்டணம் உயர்த்தப்படுவது சம்பந்தமாக விடுக்கப்பட்ட தீர்மானம் சரியானதல்ல என்ற பிரேரணை மாத்தறை பிரதேச சபையில் முன்வைக்கப்பட்டு அதிகூடிய வாக்குகளால் வெற்றிபெற்றுள்ளது.

பிரேரணை எதிர்க்கட்டசியினராலேயேமுன்வைக்கப்பட்டுள்ளது. என்றாலும், ஐதேக உறுப்பினர்கள் ஏழு பேரும், மக்கள் விடுதலை முன்னணியைச் சேர்ந்த ஒருவரும் அந்தப் பிரேரணையை ஆதரித்து வாக்களித்துள்ளனர்.

ஆளும் கட்சியைச் சேர்ந்த ஒரேயொரு உறுப்பினர் மாத்திரம் எதிராக வாக்களித்துள்ளார்.

வாக்களிக்கும் சந்தர்ப்பத்தில் ஆளும்கட்சியைச் சேர்ந்த ஐவர் வாக்களிக்காமல் இருந்திருக்கின்றனர்.

( கேஎப்)

முஸ்லிம்களுக்காக ஒரு தலைவர் இல்லவே இல்லை... என்றாலும் அவர்களுக்காக நான் நிற்கிறேன்...! - ரணில்

மன்னாரில் இன்று (28) இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சி செயற்குழு உறுப்பினர்கள் சந்திப்பொன்றின்போது, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க உரையாற்றும் போது, முஸ்லிம்களுக்காக தான் குரல்கொடுப்பதாகவும், முஸ்லிம்களுக்காக முன்னின்றுஉழைப்பதாகவும்   குறிப்பிட்டுள்ளார்.

ஆளும் கட்சியிலுள்ள முஸ்லிம் தலைவர்கள், முஸ்லிம்களின் உரிமைகளை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் விட்டுவைத்திருக்கின்றார்கள்.


இந்நாட்டுத் தமிழர்களுக்காக சம்பந்தன் எழுந்து குரல்கொடுக்கிறார். ஆனால், முஸ்லிம்களுக்காக குரல்கொடுக்க யாரும் இல்லை. இந்தக் குறையை இல்லாமற்செய்து தான் முஸ்லிம்களுக்காக்க் குரல்கொடுக்கப்போவதாக விக்கிரமசிங்க அங்கு மேலும் தெரிவித்துள்ளார்.

ஆளும் கட்சியில் முஸ்லிம் அமைச்சர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் அதிகளவு நிற்கின்றபோதும், யாரும் முஸ்லிம்களுக்கு ஆதரவாக, அவர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காகப் பேசுவதற்கு யரைம் முன்வருகிறார்கள் இல்லை எனவும் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் சிங்கள மக்களின் கலை கலாச்சாரங்கள் மிக நெருக்கமானவையாம். கூறுகின்றார் விமல் வீரவன்ச

நாட்டில் வாழும் சிங்கள-தமிழ் மக்களின் கலை, கலாசாரங்கள் மிக நெருங்கிய தொடர்புகளை கொண்டதென, அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். பம்பலபிட்டி, அரச தொடர் மாடி குடியிருப்பில் வாழும் தமிழ் குடியிருப்பாளர்கள் ஏற்பாடு செய்த சித்திரை புத்தாண்டு நிகழ்வுகளில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும்போதே, அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.


கோலம் போடுதல், பரதநாட்டியம், பூமாலை கோர்த்தல், கிடுகு பின்னுதல், திருக்குறள் மனப்பாடம், விபுலானந்த அடிகளின் வேடம், கயிறிழுத்தல் உட்பட தமிழ் இசை நிகழ்ச்சிகள் பலவும் இங்கு இடம்பெற்றன. தமிழ், சிங்கள மக்கள் சகோதர வாஞ்சையுடன் ஒற்றுமையாக வாழ்ந்த போதிலும், கடந்த காலங்களில் சில விசமிகள், இனங்களுக்pகடையே குரோதத்தை வளர்த்தனர். எனினும், கொழும்பு மாவட்டத்தில் உள்ள தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் காணப்படும் தொடர்மாடி வீடுகளில் மூவின மக்களும், ஐக்கியமாகவும், சகோதர வாஞ்சையுடனும் வாழ்ந்து வருவதாகவும், அமைச்சர் அங்கு தெரிவித்தார்.

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மொஹமட் முஸம்மில், கூட்டதான முகாமைத்து அதிகார சபையின் தலைவர் கபில கமகே, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் பொது முகாமையாளர் பிரிகேடியர் மஹிந்த முதலிகே உட்பட பலர், இதில் கலந்து கொண்டனர்.

வடக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களை இணைக்கும் புதிய பொருளாதார வலயம்!

மதவாச்சி, வவுனியா, கெபித்திகொல்லாவ, வாஹல்கட, புல்மோட்டை , பதவிய ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கும் வகையில் புதிய பொருளாதார வலயம் ஒன்றை உருவாக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

விவசாயம். கடற்றொழில் உற்பத்திகள் ஆகியவற்றிற்கு அதிக விலையை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் இத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. மதவாச்சி நகரை கேந்திரமாக வைத்து, புதிய பொருளாதார மத்திய நிலையம் ஆரம்பிக்கப்படுவதுடன், உற்பத்தி பொருட்களை விற்பனை செய்வதற்காக பல்வேறு வசதிகளையும் அரசாங்கம் ஏற்படுத்தி கொடுக்கவுள்ளது.


பல்வேறு காரணங்களினால் செயலிழந்துள்ள மதவாச்சி, பொருளாதார மத்திய நிலையத்தின் நிர்மாணப்பணிகள், துரிதப்படுத்தப்படவுள்ளதாக மதவாச்சி பிரதேச சபையின் தலைவர் கே.சி.மென்டிஸ் தெரிவித்தார். வடமத்திய மாகாண சபை இதற்கான நிதியை வழங்கியுள்ளது.

விமானப்படை பணிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் இங்கிலாந்து இளவரசர்- சன்டே டைம்ஸ

இங்கிலாந்து இளவரசர் வில்லியம், அந்நாட்டின் விமானப்படையின் 'சீ கிங்' மீட்பு மற்றும் தேடுதல் பிரிவில் ஹெலிகாப்டர் விமானியாக உள்ளார். ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளை வேட்டையாடிய 'நேட்டோ' படையில் இவர் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சுமார் 3 ஆண்டுகளாக இப்பணியில் உள்ள வில்லியம், கடந்த ஆண்டு தனது காதலி கேட் மிடில்டனை திருமணம் செய்துக்கொண்டார். இளவரசி கேட் மிடில்டன் தற்போது கர்ப்பிணியாக உள்ளார். வரும் ஜுலை மாதம் இத்தம்பதியருக்கு குழந்தை பிறக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தனது முதல்வாரிசு பிறக்கும் வேளையில் குடும்பத்தை விட்டு வெகு தொலைவில், வெகு நாட்கள் பிரிந்திருப்பதை விரும்பவில்லை என சில மாதங்களுக்கு முன்னர் ஒரு பேட்டியின் போது வில்லியம் கூறியிருந்தார்.

இந்நிலையில், இன்னும் ஓரிரு மாதங்களில் விமானப்படை பணியை விட்டு விலகப்போவதாக வில்லியம் தனது உயரதிகாரியிடம் தெரிவித்துள்ளதாக இங்கிலாந்தில் இருந்து வெளியாகும் 'சன்டே டைம்ஸ்' பத்திரிகை, செய்தி வெளியிட்டுள்ளது.

டக்ளஸ் தேவானந்தாவுக்கு பகிரங்க மடல்


300 வரையான உள்ளுர் நோயாளிகளுக்கு உணவு வழங்கும் பொறுப்பில் உள்ள யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரி உணவகம் (கன்ரீன்) என்ன நிலையில் நடக்கிறது என்று தெரியுமா? 12 சமையல் பணியாளர்கள் நியமனம் செய்யக்கூடிய இடத்தில் 6 பேர் மட்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்த 6 பேரிலும் இரவுக்கடமை, விடுமுறை, சிறுவிடுப்பு நேரங்களில் 2 அல்லது 3 பணியாளர்கள் மட்டுமே சகல நோயாளர்களுக்கும் உணவு பரிமாற வேண்டி ஏற்படுகிறது. இதனால் நோயாளிகளுக்கு சரியான கவனிப்பு கிடைக்காமல் அவர்கள் அவதிப்பட வேண்டியுள்ளனர்.


இதனை விட ஜப்பானிய அரசாங்கத்தால் பல மில்லியன் ரூபா பணம் செலவு செய்து கட்டப்பட்ட நவீன மருத்துவமனை அமைந்துள்ள ஆஸ்பத்திரி வளாகத்திலே உணவகத்தின் நிர்வாகப் பணியாளர்களின் நிலமை இவ்வாறு இருக்கும்போது, உணவகத்தின் நிலமை இதனை விட வெட்கக்கேடானது.

இவ்வுணவகமானது சிறிய மழைக்குக்கூட ஒழுகும் நிலையில் உள்ளது. ஒழுகும் மழை நீரால் உணவகத்தினதும், நோயாளர்களினதும் சுகாதாரம் பாதிக்கப்படுகிறது. கடந்த 03 வருடமாக இதே நிலமையிலேயே இது உள்ளது. மழை பெய்யும் போது அவர்களிடம் சென்று முறையிட்டால் கூரையை உடனடியாக மாற்றுவதாக கூறுவார்கள் பிறகு கண்டுகொள்ள மாட்டார்கள்.

இதனை விட சகல நோயாளிகளுக்கும் தயாரிக்கப்படும் உணவுக்கான மிளகாய்த்தூளை இன்று வரை அவர்கள் உரலில் இட்டு இடித்து தான் பயன்படுத்துகிறார்கள். மிளகாய்த்தூள் இடிக்கும் பணியில் சென்ஜோன்ஸ் அம்புலன்ஸ் படைப்பிரிவை சேர்ந்த 15 – 16 வயது மாணவர்களே (சாரணர்கள்)ஈடுபடுகின்றார்கள்.

யாழ் மாவட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை தலைவராக கொண்ட யாழ்ப்பாண ஆஸ்பத்திரியில் நோயாளருக்கான உணவு விடுதியில் தெரிந்தே விடப்பட்டுள்ள குறைபாடுகளை மக்கள் ஊழலாகவே கருதுகிறார்கள். தமிழ் மக்களுக்கு வேலைவாய்ப்பை பெற்றுத்தருவதாகவும், மீள்கட்டுமானத்தை செய்வதாகவும் பீற்றிக்கொள்ளும் டக்ளஸ் தேவானந்தா தனது அதிகாரத்திற்கு உட்பட்ட யாழ் ஆஸ்பத்திரியில் சமையலறை பணியாளர் வெற்றிடத்தை நிரப்பாமல் இருப்பது ஏன்? கடந்த 3 வருடமாக ஒழுகும் கூரையை திருத்தாமல் இருப்பது ஏன்? சென்ஜோன்ஸ் அம்புலன்ஸ் பிரிவு சாரணர்கள் உருவாக்கப்பட்ட நோக்கம் யாழ்ப்பாண ஆஸ்பத்திரியில் மிளகாய்த்தூள் இடிப்பதற்காகவா என்று மக்கள் கேள்வி எழுப்புகின்றார்கள்.

இந்த நிலையில் ஜப்பான்காரன் என்ன அமெரிக்கா உட்பட அகில உலகமே வந்து அபிவிருத்திக்காக பாடுபட்டாலும் ஒன்றும் நடக்காது. ஊழல் அற்ற நிர்வாகம் ஒன்று ஏற்படும் வரை வடக்கை பொறுத்தவரை எல்லாமே கானல் நீர்தான்.

இவ்வண்ணம்
வி.சகாதேவன்
தலைவர்
போரால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கம்.