இது தொடர்பில் பாதிக்கப்பட்டுள்ள உத்தியோகத்தர்களில் ஒருவர் முறையிட்டுள்ள நிலையில் இது குறித்து அறிந்து கொண்ட பிரதேச செயலர் குறித்த பெண் உத்தியோகத்தரையும் பாலியல் துன்புறுத்தல்களை மேற்கொண்ட பிரதேச செயலகத்தின் ஒரு உயரதிகாரியினையும் அழைத்து விசாரணை செய்து இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இருப்பினும் நிர்வாக பிரிவில் உயரதிகாரியாக கடமையாற்றும் அவர் தொடர்ந்தும் சம்பந்தப்பட்ட பெண் உத்தியோகத்தர் மற்றும் அவரோடு நெருங்கிய ஊழியர்களையும் பழிவாங்கும் வகையில் அலுவலகத்தில் கடமை ரீதியில் துன்புறுத்தல்களை மேற்கொண்டு வருகின்றார் எனவும், இதனால் தங்களால் தொடர்ந்தும் இயல்பான மனநிலையில் பணிகளை மேற்கொள்ள முடியாமல் உள்ளதாகவும் குறிப்பிடுகின்றனர்.
இந்த உயர்அதிகாரியின் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்குப் பல பெண்கள் உள்ளாக்கப்பட்டிருப்பதாகவும் ஆனால் அவர்கள் இந்த விடயங்களை பல்வேறு காரணங்களை கருதி வெளியில் தெரிவிக்காமல் இருப்பதாகவும் குறிப்பிடும் சில உத்தியோகத்தர்கள்,
அண்மையில் பாலியல் ரீதியான துன்புறுத்தலை மேற்கொள்ளும் நோக்கில் அலுவலகத்தில் வைத்து ஒரு பெண் உத்தியோகத்தரின் கையை பிடித்து இழுத்த போது அப்பெண் உத்தியோகத்தர் கடும் எதிர்ப்பினை வெளியிட்டு வெளியேறிய நிலையில் குறித்த உயரதிகாரியின் பாலியல் ரீதியான துன்புறுத்தல் நடவடிக்கைகள் வெளியில் தெரிய வந்துள்ளது.
எனவே, மேற்படி அதிகாரியின் இவ்வாறான கீழ்த்தரமான செயற்பாடுகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட மட்ட உயரதிகாரிகளிடம் குறித்த பிரதேச செயலகத்தின் பல ஊழியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதேவேளை குறித்த உயரதிகாரியின் செயற்பாடுகளால் பாதிக்கப்பட்டுள்ள சில பெண்கள் தாங்கள் இரகசியமாக எவரிடமும் முறையிட தயாராக உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment