Monday, April 29, 2013

தமிழ் சிங்கள மக்களின் கலை கலாச்சாரங்கள் மிக நெருக்கமானவையாம். கூறுகின்றார் விமல் வீரவன்ச

நாட்டில் வாழும் சிங்கள-தமிழ் மக்களின் கலை, கலாசாரங்கள் மிக நெருங்கிய தொடர்புகளை கொண்டதென, அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். பம்பலபிட்டி, அரச தொடர் மாடி குடியிருப்பில் வாழும் தமிழ் குடியிருப்பாளர்கள் ஏற்பாடு செய்த சித்திரை புத்தாண்டு நிகழ்வுகளில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும்போதே, அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

கோலம் போடுதல், பரதநாட்டியம், பூமாலை கோர்த்தல், கிடுகு பின்னுதல், திருக்குறள் மனப்பாடம், விபுலானந்த அடிகளின் வேடம், கயிறிழுத்தல் உட்பட தமிழ் இசை நிகழ்ச்சிகள் பலவும் இங்கு இடம்பெற்றன. தமிழ், சிங்கள மக்கள் சகோதர வாஞ்சையுடன் ஒற்றுமையாக வாழ்ந்த போதிலும், கடந்த காலங்களில் சில விசமிகள், இனங்களுக்pகடையே குரோதத்தை வளர்த்தனர். எனினும், கொழும்பு மாவட்டத்தில் உள்ள தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் காணப்படும் தொடர்மாடி வீடுகளில் மூவின மக்களும், ஐக்கியமாகவும், சகோதர வாஞ்சையுடனும் வாழ்ந்து வருவதாகவும், அமைச்சர் அங்கு தெரிவித்தார்.

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மொஹமட் முஸம்மில், கூட்டதான முகாமைத்து அதிகார சபையின் தலைவர் கபில கமகே, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் பொது முகாமையாளர் பிரிகேடியர் மஹிந்த முதலிகே உட்பட பலர், இதில் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment