கலாசார மற்றும் கலை அலுவல்கள் அமைச்சின் ஏற்பாட்டில் கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் 8ஆவது முறையாக நடாத்தப்படும் 2013 -அரச தொலைக்காட்சி விருது வழங்கல் விழாவுக்கான விண்ணப்பங்கள் இலங்கை தொலைக்காட்சிகளில் 2012 வருடத்தில் டிசம்பர் 31 ஆம் திகதிக்குள் ஒளிபரப்பட்ட அனைத்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் அனைத்தும் இவ்விருதுக்காக விண்ணப்பிக்க முடியும். இவற்றில் சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் விருதுகள் வழங்கப்படவுள்ளது.
தொலைக்காட்சிகளில் திறமைகளை வெளிக்காட்டிய அனைத்து கலைஞர்களையும் கௌரவித்து விருதுகள் வழங்கப்படவுள்ளது. இதன் போது தொலைக்காட்சி நாடகம் (தொடர்கள்), தொலைக்காட்சி நாடகம் (ஓர் அங்கம்), தொலைக்காட்சி விவரண நிகழ்ச்சிகள், தொலைக்காட்சி விவரண திரைப்படம், தொலைக்காட்சி கலந்துரையாடல் நிகழ்ச்சிகள்,தொலைக்காட்சி சஞ்சிகை நிகழ்ச்சிகள்,
கல்வி மற்றும் கலாசார நிகழ்ச்சிகள்,தொலைக்காட்சி இசை நிகழ்ச்சிகள், கிரபிக் அனிமேசன்) நிகழ்ச்சிகள், கட்புலக் கலைப் பாடல்கள், தொலைக்காட்சி முழு விளம்பரங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சி முன்னோட்டம், தொலைக்காட்சி சிறுவர் நிகழ்ச்சிகள், தொலைக்காட்சி விளம்பரங்கள் (பொது வியாபார), தொலைக்காட்சி நிகழச்சி தொகுப்பாளர்இதொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் தொலைக்காட்சி செய்தியறிக்கை
தொலைக்காட்சி குறுந்திரைப்படம், பின்னணி குரல் வழங்கல் நிகழ்ச்சி,ஒளி நெறியாள்கை (மல்டி கமரா தயாரிப்புகளுக்காக மாத்திரம்), தொலைக்காட்சி புதுமை ஆக்கங்கள் தொலைக்காட்சி அரங்க அமைப்பு (தொலைக்காட்சி நாடகத்திற்கு வழங்கப்படமாட்டாது).
தொலைக்காட்சி தொடர்பாக வெளிவந்த இலக்கிய நூல் (முதல் பதிப்பு) ஆகியவற்றுக்கு 42 விருதுகள் வழங்க்கப்படவுள்ளது.
விண்ணப்பப்படிவங்கள் பணிப்பாளர், கலாசார அலுவல்கள் திணைக்களம், செத்சிறிபாய, பத்தரமுல்லை என்ற முகவரிக்கு முத்திரை ஒட்டப்பட்ட கடித உறையை அனுப்பி பெற்றுக்கொள்ளலாம்.சகல படைப்புகளும் டீ.வி.டி இருவெட்டு மூலம் 2013 மே 23 ஆம் திகதி பி.ப. 4.00 மணிக்கு முன்னர் கிடைக்கப்பெறவேண்டும்.
மேலதிக விபரங்களுக்கு: 011 2872031 அல்லது 011 287235 என்ற தொலைபேசியுடன் தொடர்பு கொண்டு பெறலாம் .
தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்புகளில் சிறந்த படைப்புகளை உருவாக்குவதில் பங்குபற்றி அவர்களின் வாழ்நாள் முழுவதையும் தொலைக்காட்சிக்காக அர்ப்பணிப்பு செய்யும் கலைஞர்களை கௌரவிக்கும் நோக்கோடு கலாசார மற்றும் கலை அலுவல்கள் அமைச்சின் ஏற்பாட்டில் கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் 8ஆவது முறையாக அரச தொலைக்காட்சி விருது வழங்கல் விழா நடாத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment