Sunday, April 28, 2013

Saturday, April 27, 2013 இலங்கையின் மரதன் ஓட்டவீரருக்கு இலண்டனில் பெரும் பாராட்டு!

நேற்று முன்தினம் இலண்டனில் இடம்பெற்ற மரதன் ஓட்டப்போட்டியில் 35,000 இற்கும் அதிகமான போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். அவர்களுள் 14 ஆவது இடத்தைப் பெற்று, அதிதிறமையைக் காட்டிய அநுராத இந்திரஜித் குரேவுக்கு இலண்டனிலுள்ள இலங்கையர்கள் மலர்ச் செண்டு கையளித்துப்பாராட்டியுள்ளனர்.

2012 இல் இலண்டனில் இடம்பெற்ற ஒலிம்பிக் போட்டியிலும் இலங்கை சார்பாக கலந்துகொண்ட அநுராத, இம்முறை இலண்டனில் இடம்பெற்ற மரதன் ஓட்டப்போட்டிக்கு, அவர் பயிற்சிபெறுகின்ற பகிங்ஹோம் பிராந்தியத்தில் உள்ள ’வேல் ஒப் எயல்ஸ்பரி’ விளையாட்டுக் கழகத்தை பிரதிநிதித்துவப்படுத்தியே கலந்துகொண்டுள்ளார்.


அநுராதவின் பிரித்தானியப் பயிற்றுவிப்பாளர் நிக் டெய்லர் குறிப்பிடும்போது,

‘அநுராத பயிற்சியளிக்கப்படுவது பிரத்தானியாவினுள் இடம்பெறும் அரச மட்டப்போட்டிகளில் கலந்துகொள்வதற்காக மட்டுமே! இலங்கையில் பொறுப்புச்சொல்ல வேண்டியவர்கள் அநுராதவுக்குச் சிறந்த முறையில் கைகொடுத்தால் மிகச் சிறந்த பெறுபேற்றை அவரிடமிருந்து எதிர்பார்க்கலாம்.

இவ்வாண்டு ஆகஸ்ற்றில் மொஸ்கவ் நகரில் நடைபெறவுள்ள உலக மட்ட விளையாட்டுப் போட்டியிலும், 2014 ஆம் ஆண்டு ஸ்கொட்லாந்தில் நடைபெறவுள்ள போட்டியிலும், நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியிலும் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தவுள்ளதனால், இலங்கையிலுள்ள விளையாட்டுக்குப் பொறுப்பானவர்கள் தமக்கு உதவுவார்கள் எனப் பெரிதும் தான் நம்பிக்கைகொண்டிருப்பதாக, போட்டியின் இறுதியில் அநுராத தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment