Sunday, April 28, 2013

ரவூப் ஹக்கீம்-டக்ளஸ் தேவானந்தா சந்திப்பு!

hakeem-duglas


யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தவை நட்பு ரீதியாக சந்தித்து கலந்துரையாடினார்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அலுவலகத்தில் நேற்று (27) இச்சந்திப்பு இடம்பெற்றது.

இதன்போது யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் பல்வேறு அபிவிருத்தி செயற்திட்டங்கள் மற்றும் தற்போதைய அரசியல் நிலைப்பாடுகள் தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

மல்லாகம் மற்றும் சாவகச்சேரியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் மாவட்ட நீதிமன்றக் கட்டிடங்களின் நிலமைகள் மற்றும் அவற்றைத் திறந்து வைப்பது தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது

No comments:

Post a Comment