அவுஸ்த்திரேலியாவில் அகதி அந்தஸ்து கோரும் இலங்கையர்களிடம் அதற்கான தகமைகள் இல்லாவிடின் திருப்பி அனுப்பப்படுவார்கள் என, அவுஸ்த்திரேலிய குடியுரிமை அமைச்சர் ப்ரெண்டன் ஓ கோணர் அறிவித்தல் விடுத்துள்ளார்.
25 பேர் கொண்ட இலங்கை புகலிடக்கோரிக்கையாளர்கள் இலங்கை திருப்பி அனுப்பப்பட்டமைக்கான காரணமும் அகதி அந்தச்த்துக்கான தகுதியின்மையே என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு அகதி அந்தஸ்து கோரும் தகுதியற்றவர்கள் பலர் திருப்பியனுப்பப்பட்டுள்ளதாகவும், இனிவரும் காலங்களிலும் உரிய விசா அனுமதியின்றி அவுஸ்த்திரேலியா வரும் இலங்கையர்கள் திருப்பி அனுப்பப்படும் அதேவேளை, நவுறு தீவு மற்றும் மனுஷ் தீவுகளில் மட்டுமே தங்கவைக்கப்படுவார்கள் எனவும், அவுஸ்த்திரேலிய குடியுரிமை அமைச்சர் ப்ரெண்டன் ஓ கோணர் அறிவித்தல் விடுத்துள்ளார்.
No comments:
Post a Comment