மே தினம் முடிவுற்றதும் வட மாகாணத்தில் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பான நடவடிக்கைகளை ஆரம்பிக்க வுள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் பொருளாளரும் அமைச்சருமான டளஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியானது தற்போது கட்சியின் மே தினக் கொண் டாட்டங்களை சிறப்பாக நடத்துவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்த அமைச்சர்; ஓரிரு வாரங்களில் வேட்பு மனுக்கான விண்ணப்பங்களை கோரவுள்ளதாகவும் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பு மனுவில் வடக்கிலுள்ளோர் இணைத்துக் கொள்ளப்படுவர். அதற்கென அவர்கள் விண்ணபிப்பதற்கு வாய்ப்பளிக் கப்படும் எனவும் தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் உபதலைவர் அமைச்சர் டபிள்யூ ஜோன் செனவிரத்ன வடமாகாண தேர்தல் தொடர்பில் தெரிவிக் கையில்;
வேட்பு மனுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டு நேர்முகப்பரீட்சை மூலம் பொருத்தமானோர் வேட்பாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் எனத் தெரிவித்தார்.
விண்ணப்பம் கோரலுக்கான விளம்பரங்கள் தேசிய பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட வுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment