சாதாரண மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையிலேயே புதிய மின் கட்டண திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதெனவும் வருடாந்தம் 26000 மில்லியன் ரூபாவை மக்களுக்கு இதன் மூலம் அரசாங்கம் நிவாரணமாக வழங்குகிறது எனவும் மின்சார சபைத் தலைவர் டபிள்யூ. பி. கணேகல தெரிவித்தார்.23 ரூபா 30 சதத்திற்கு உற்பத்தி செய்யும் மின் அலகொன்றை 8 ரூபா 25 சதத்துக்கு மக்களுக்கு வழங்கும் நாடு இலங்கை மட்டுமே என தெரிவித்த அவர்- இந்த மானியத்திட்டத்தின் கீழ் சிறுதொழில் முயற்சியாளர்களுக்கும் 25-000 மில்லியனை அரசாங்கம் மானியமாக வழங்குகிறது எனவும் தெரிவித்தார்.
ஒன்றிலிருந்து 90 மின் அலகுகளை மாதாந்தம் உபயோகிக்கும் சாதாரண மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையிலேயே புதிய மின் கட்டணத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனத் தெரிவித்த அவர்- மக்கள் இதனைச் சரியாக புரிந்துகொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார்.
திக்கற்று நிற்கும் சில அரசியல் கட்சிகளே மக்களைக் குழப்பும் செயற்பாடுகளில் இறங்கியுள்ளன எனத் தெரிவித்த அவர்- மின்சார சபையையும் பாதுகாத்து சாதாரண மக்களையும் பாதுகாக்கும் நோக்கிலேயே அரசாங்கம் செயற்பட்டு வருகிறது என்பதை சகலரும் உணர வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment