தேர்தல் காலங்களில் மட்டும் உரிமைகள், தேசியம் தொடர்பாகப் பேசுகின்ற தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் இலங்கையில் தொடர்ந்தும் குழப்பம் நிலவுவதையே விரும்புகின்றனர். இதற்கு இடம்கொடுக்காது நாம் அனைவரும் ஒன்றுபட்ட சக்தியாக உருவெடுக்க வேண்டும் என தேசிய வீடமைப்பு மற்றும் பொது வசதிகள் அமைச்சர் விமல் வீரவன்ச யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார்.ஜேனிவா, இந்தியாவில் இருப்பவர்களும் ஜெனிவாவிற்குச் சென்று வருபவர்களும் எமது பிள்ளைகளின் கழுத்துகளில் சயனைட் குப்பிகள் இருப்பதையே விரும்புகிறார்கள். இதனால் எமது பிள்ளைகளின் எதிர்காலமே பாதிப்படைகிறது எனவே உண்மையாகவே தமிழ் மக்கள் மீது அன்பும் பாசமும் இருந்திருந்தால் யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது இந்த ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டிருக்க வேண்டும் என யாழ்ப்பாணம், குருநகர் பகுதியில் அமைந்துள்ள ஐந்துமாடிக் கட்டிடத் தொகுதியை மீள் புனரமைக்கும் பணிகளைத் தொடக்கி வைக்கும் நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனை தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment