இலங்கை ராணுவத்தை இழிவுபடுத்தும் வகையிலும், சிங்கள தமிழ் மக்கள் மத்தியில் நிலவும் உறவை குலைத்து மீண்டும் நெருக்கடி உருவாக்குவதற்கும், இங்கிலாந்திலிருந்து எடுத்து வரப்பட்ட குல பேதத்தை தூண்டும் வகையிலான நூலொன்றை வெளியிட மேற்கொண்ட முயற்சிக்காக கொண்டுவரப்பட்ட ஏராளமான நூல்கள் தீயிட்டு கொழுத்தப்பட்டுள்ளது.
இங்கிலாந்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த சில தமிழர்கள், யாழ்ப்பாணம், ஆவரங்கால் பகுதியில் தமிழர்களின் உயர் சாதியை சேர்ந்த சிலர் தமிழ் மக்களின் தாழ்ந்த சாதியினரை விமர்சிக்க கூடிய வகையில் எழுதியுள்ள நூலை வெளியிட மேற்கொண்ட முயற்சி, இவ்வாறு முறியடிக்கப்பட்டது.
தற்போது யாழ்ப்பாணத்தில் உள்ள மக்கள் குல பேதத்தை கரிசணை காட்டாமல், வாழும் மக்களின் சக வாழ்வையும் கடுமையாக விமர்சிக்கக்கூடிய வகையில் இந்த நூல் எழுதப்பட்டிருந்ததால் ஆவரங்கல் பகுதி மக்கள் மத்தியில் மட்டுமல்லாது தமிழ் மக்களை மீண்டும் நெருக்கடியை தோற்றுவிக்க கூடியதாக அமைந்திருந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நூலை வெளியிடும் வைபவத்திற்கு வருகை தந்த அப்பகுதி தமிழ் இளைஞர்கள், இந்நூலை வாசித்து விட்டு நூலில் குலபேதத்தை தூண்டக்கூடிய விதத்திலான கட்டுரைகள் எழுதப்பட்டிருந்ததால் கோபமடைந்து நுர்ல்கள் அனைத்தையும் தீயிட்டு கொழுத்தியதுடன், கூட்டத்தையும் கலைத்துள்ளனர்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த அப்பிரதேச மக்கள், இங்கிலாந்திலிருந்து தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கு, சில தமிழர்கள் மேற்கொள்ளும் முயற்சியை, தாம் முற்றாக நிராகரிப்பதாகவும் இனிமேல் எங்களைப்பற்றி நீங்கள் கவலைப்பட தேவையில்லை எனவும் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment