இலங்கைக்கெதிரான வாசகங்கள் அடங்கிய பதாதைகளுடன் ஐ.பி.எல். போட்டிகளை காணச் சென்ற 28 பேர் சென்னையில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்ட அனைவரும் மாணவர்கள் என இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. சந்தேக நபர்கள் இலங்கைக்கு எதிராக வாசகங்கள் பொறிக்கப்பட்ட உடை அணிந்து மைதானத்திற்குள் நுழைய முற்ப்பட்டதாகவும் இவர்களை இடைமறித்த பொலிசார் அவர்களை கைதுசெய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.சேப்பாக்கம் சிதம்பரம் விளையாட்டரங்கில் நேற்று இடம்பெற்ற சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசஸ் ஹைதராபாத் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியின் இலங்கைக்கெதிரான வாசகங்கள் அடங்கிய பதாதைகளுடன் சென்றவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் இலங்கை வீரர்கள் தமிழகத்தில் மாத்திரமன்றி இந்தியாவில் எந்தவொரு பகுதியிலும் விளையாடக்கூடாது என கூறி மாணவர்கள் ஊர்வலமாக சென்றதாகவும் தெரியவந்துள்ளது.
No comments:
Post a Comment