Thursday, April 4, 2013

இலங்கையில் அபிவிருத்திக்கு தொடர்ந்து உதவியளிக்கப்படும்.

இலங்கையின் அபிவிருத்திப் பணிகளுக்கு, சீனா தொடாந்தும் ஆதரவு வழங்குமென, இலங்கைக்கான புதிய சீன தூதுவர் வூ ஜியாங்ஹோ உறுதியளித்துள்ளார். அமைச்சர் றிஷாட் பதியுதீனை, அமைச்சில் சந்தித்தபோதே, சீன தூதுவர் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கூடுதலான முதலீடுகளை மேறகொள்வதற்கு, சீன முதலிட்டாளர்கள் ஆர்வம் கொண்டுள்ளதாகவும், புதிய தூதுவர் அங்கு தெரிவித்துள்ளார். சீனாவின் உதவிகள் இலங்கையின் உற்பத்தி துறைக்கு மிகவும் பயனளிக்கும் ஒன்றாக இருக்குமென்பதையும், அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கை உற்பத்திகளுக்கு, சீனாவில் சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்துவது குறித்தும் இங்கு ஆராயப்பட்டுள்ளது. ஆடைக்கைத்தொழில், தேயிலை மற்றும் ஏனைய பொருட்களை சீனாவிற்கு ஏற்றுமதி செய்வது குறித்தும், கலந்துரையாடப்பட்டுள்ளது. 1952 மற்றும் 1982ம் ஆண்டுகளில் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கைகள் குறித்தும், இங்கு ஆராயப்பட்டது. இச்சந்திப்பின்போது, இலங்கை வர்த்தக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பி.டி. பெர்னாண்டோ, வர்த்தக பணிப்பாளர் அசோக கொடபிட்ட ஆகியோரும், கலந்து கொண்டுள்ளனர்.

No comments:

Post a Comment