Thursday, April 4, 2013

அரசியல்வாதிகளுக்கு தரச்சான்றிதழ் வழங்கும் திட்டம் வேண்டும் - அரசிற்கு அமைச்சர் ஆலோசனை.

இலங்கையில் இன்று அரசியல்வாதிகளுக்கு எவ்வித தராதரங்களும் இல்லாத நிலையில் அரசியல்வாதிகளுக்கு தரச்சான்றிதழ் வழங்கும் வேலைத் திட்டமொன்றை ஆரம்பிக்க வேண்டும் என சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நேற்று (03) இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர் இந்த வேண்டுதலை விடுத்துள்ளார்.

நாட்டில் தற்போது தரம் கூடிய, தரம் குறைந்த அரசியல்வாதிகள் காணப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தரம் குறைந்த சில அரசியல்வாதிகளால் தரம்கூடிய சில அரசியல்வாதிகளின் நற்பெயருக்கு அபகீர்த்தி ஏற்படுகின்றது எனத் தெரிவித்துள்ளார்.

அரசியல்வாதிகளுக்கு தரச்சான்றிதழ் வழங்கினால் தரம் கூடியவர்கள் என சான்றிதழ் பெறுவோருக்கு மாத்திரம் மக்கள் வாக்களிப்பர் என அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

எனவே சான்றிதழ் வழங்கும் திட்டம் மிக விரைவில் செயற்படுத்தப்பட வேண்டும் என அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

அமைச்சரின் வேண்டுதலின் பிரகாரம் அரசியல்வாதிகளுக்கும் தரம் வழங்கினால் நம்மட அரசியல் வாதிகளான சுரேஸ் பிறேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், டக்ளஸ் தேவானந்தா, கருணா, பிள்ளையான் போன்ற முன்னாள் ஆயுததாரிகளுக்கு எத்தனையாம் தரம் வழங்கப்படும் என்பதுதான் கேள்வி.

No comments:

Post a Comment